Sunday, September 8
Shadow

என்னது விஜய் படத்தை இயக்க அட்லீ இவ்வளவு சம்பளம் கேட்டாரா??

இந்த செய்தியை கேட்டவுடன் எனக்கு புதுப்பேட்டை படத்தில் ஒரு காட்சில் படத்தின் தாதா தனுஷை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் அது தான் எனக்கு நினைவிற்கு வருகின்றது

“இப்பலாம் பசங்க டபுக்கு டபுக்கு னு மேல வந்துரனுங்க” இந்த வசனமே என் நினைவில் வந்தது அட்லீ யை பொறுத்தவரை நாதாரி தனம் பண்ணிநாலும் நாசுக்கா பண்ணுவாப்-ள அது தான் அவருடைய வெற்றிக்கு காரணம் சும்மா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மாரி அழகா பண்ணிடுவார்

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய், அட்லீ இணையும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் அட்லீக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்குமாறு தேனாண்டாள் பிலிம்ஸிடம் கூறியதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.

இளைய தளபதியே தயாரிப்பாளரிடம் தெரிவித்ததாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

Leave a Reply