விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 30ஆவது படத்திற்கு சங்கதமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். முதன் முதலாக இப்படத்தில் திருநங்கையாக (ஷில்பா) நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து கடைசி விவசாயி, சிந்துபாத், ஷியா ராம் நரசிம்ம ரெட்டி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.