
ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். படத்தின் தமிழ் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் சென்றமாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பைத் அதிகரித்தது. அஜித் குமாருடன் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திறமையான நடிகையான ஷார்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவிக்கையில் நடிகை வித்யா பாலனை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பது மற்றுமொரு சிறப்பு என்றார்.
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் தற்போது இந்த கூட்டனியில் இணைந்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வேங்கடாசம், ஆன்டிரியா, அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். தொழில்நுட்ப துறையை பொருத்தவரை, இந்த் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைகிறார். சினிமாட்டோகிராப்பியை நிர்வ ஷா, சண்டை காட்சிகளை திபீப் சுப்ராயன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து, அவர் தள அஜீத் உடன் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாவும் அந்த படத்தை 2019 ஜூலையில் தொடங்கி வரும் 2020 ஏப்ரலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.