“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி
“விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்… அவருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பு!” – ‘பத்தா’ வெற்றி குறித்து சாய் அப்யங்கர் நெகிழ்ச்சி
‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி இசையமைப்பாளர் சாய் அப்யங்கருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், படத்தின் வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
படத்தை பாலாஜி சாருடன் இணைந்து முதன்முறையாகப் பார்த்தபோது, மிகவும் வியந்து போனதாகக் கூறிய சாய் அப்யங்கர், படத்தில் கதாநாயகர்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பதாக பாராட்டினார்.
மேலும், தன் மீது நம்பிக்கை வைத்து ‘பத்தா’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய அட்லீ அண்ணாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் தனது இசையின் மீது நம்பிக்கை வைத்த பாலாஜி சார்,...









