
இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்த இளையதளபதி விஜய் தனது 61வது படத்தின் மூலம் தளபதி விஜய்ஆக மாறியுள்ளது சமூகவலைதளங்களில் பெரிதும் ட்ரெண்ட்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், தல, புரட்சித் தளபதி என பல முன்னணி நடிகர்கள் தங்களது பெயருக்கு முன் அடைமொழி வைத்துக் கொண்டுள்ளனர்.
திரையரங்குகளில் நடிகர்களின் பெயர் வருவதற்கு முன்னர் வரும் அடைமொழிக்கே விசில் பறக்கும். இதே போன்று சினிமாவை பொறுத்தவரை விஜய் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிறார்.
இளைஞர்கள் மத்தியிலும், குழந்தைகளிடையேயும் அவருக்கு தனி வரவேற்பு உண்டு.
இதனையடுத்து அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு சமூக நலன் விரும்பிகளின் கோரிக்கையை ஏற்று இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதில்லை எனவும் உறுதி எடுத்தார்.வாழ்க்கை என்பது வட்டம் போல எனவும், மேலிருப்பன் கீழே வருவான், கீழே இருப்பவன் மேலே போவான் என்ற அவர் பேசிய வசனங்கள் இப்போதைய நடைமுறையில் சாத்தியமே.
இதுவரை தனது படங்களில் இளையதளபதி பட்டத்தை உபயோகப்படுத்தி வந்த விஜய் அவரது 61வது படமான மெரசல் மூலம் தளபதி விஜய் என்ற அவதாரம் எடுத்துள்ளார். சமூக நலனில் அக்கறை செலுத்தி வரும் விஜய்க்கு ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா படத்திலேயே தலைவா, தலைவா உதிரம் எழுது தலைவா என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது
இந்த உத்வேகம் ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் வருகைக்கானது என்று சமிக்ஞை காட்டப்பட்டது. ஆனால் அமைதியாகவே இருந்த விஜய் தனது 61வது படத்தில் ‘தளபதி’யாக மாறியுள்ளது அனைவராலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த தளபதி அடைமொழி சமூகவலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு ட்ரெண்ட்டாக மாறி வருகிறது.