Wednesday, October 28
Shadow

விவசாயியாக நடிப்பாரா விஜய் ?

சமீபகாலமாக விஜய்யின் பேச்சுக்கள் அரசியல் நோக்கம் அதிகமாக தெரிகிறது அதிலும் கடந்த சில நாளுக்கு முன் விவசாயிகளுக்கு குரல் கொடுத்து இருக்கும் விஜய் அவரின் ரசிகர்களை மிகவும் சந்தோஷ படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லை விஜய் ஜல்லிக்கட்டு பிரச்சனை போதும் மிகவும் ரகசியமாக வந்து சென்றது இளைஞர்கள் கவனம் அவரின் பக்கம் திரும்பியது என்பதும் நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் தேசிய விருது வாங்கிய இயக்குனர் மணிகண்டன் தற்போது இயக்கம் படம் விவசாயிகள் சம்பந்தமானது

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற வித்தியாசமான படங்களால் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். ‘காக்கா முட்டை’ படத்துக்காக தேசிய விருது வென்றவர். இயல்பான உண்மைக் கதைகளைப் படமாக எடுக்கும் இவர், அடுத்ததாக ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கப் போகிறார்.

இந்தியாவில் தற்போது முக்கியப் பிரச்னையாக, குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவும் விவசாயப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளார் மணிகண்டன். இதனால், ஊர் ஊராகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து வருகிறார். அவர்களின் உண்மைக் கதையை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்காக குரல் கொடுத்த விஜய், இந்தப் படத்தில் நடிப்பாரா? என்று கேள்வி கேட்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

Leave a Reply