Thursday, March 12
Shadow

விஷாலின் வில்லங்க பேச்சு ஊடகங்களின் கோவம் சமாளிப்பார விஷால்?

நெருப்புடா பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர்
விஷால் பேசும்போது,

திரைப்படங்களுக்கான விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
படம் உங்கள் முதலீடு,பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை.

விமர்சனம் என்பதே கருத்து பரிமாற்றம். அது சரி தவறு என்பதை படிக்கிறவன் தீர்மானிக்க வேண்டியது. விமர்சனம் வியாபாரமல்ல.
சிறுபடங்கள் ஜோக்கர், மாநகரம், துருவங்கள் 16, போன்ற படங்கள் ரீலீசுக்கு முன்னரே பத்திரிகையாளர்களுக்கு,திரையிட்டு காட்டப்பட்டதால் அப்படங்கள் பற்றி பத்திரிகைகள் நேர்மையானவிமர்சனங்களை எழுதியதால். படங்கள் வெற்றி பெற்றன.
பெரிய படங்களுக்குத்தான் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் ஓவராக புகழ்வதும், சுமாராக இருந்தால் அதை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்குவதும் நடக்கிறது.

இருமுகன், கபாலி படங்கள் விமர்சனத்துக்குப் பின்பே கல்லா கட்டியது. ஆரம்ப கட்ட தடுமாற்றங்களை போக்குவது விமர்சனங்கள்தான்.

பெரிய படங்களுக்கு முதல் மூன்று நாட்கள் பார்வையாளர்கள், ரசிகர்கள் வந்துவிடுகிறார்கள். சின்னப்படங்களுக்கு அப்படி வருவதில்லை.

பார்வையாளர்கள், ரசிகர்கள் வராத பட்சத்தில் முதல் முதல் நாளிலேயேபடத்தை திரையரங்கிலிருந்து தூக்கிவிடும் நிலை உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு வெளியிடப்படும் படத்திற்கு திரையரங்கில் எல்லா காட்சிகளுக்கும்கூட்டம் இருக்கோ இல்லையோ ஓட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வரமுடியாது. அப்படி முடியாதபோது சிறு படங்கள் பெரும்பாலும் விமர்சனமில்லையென்றால் கட்டாயம் பாதிக்கப்படும்.

விஷால், படங்கள் ஓடவேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசுகிறார் என்பதை ஏற்றுக்கொண்டாலும்,
விமர்சகர்கள் குறைந்த பட்ச கருணையோடுதான் நடந்துகொள்கிறார்கள் என்பது தான் இன்றைய நிலை.
பல சிறுபடங்களுக்கு குறைத்து எழுதிவிட்டால் அந்தப் படம் பாதிக்கப்படுமோ என ஊடகங்கள் விமர்சனம் எழுதுவதேயில்லை.
ஒரு படத்தை ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு தெரியப்படுத்துவது ஊடகங்கள் தான்.

நல்ல படங்களைத் தர முயற்சியுங்கள். வியாபார முறையை முறைப்படுத்த முயலுங்கள் அப்படி முறைப்படுத்துவதின் மூலம் தோல்வியடையும் படங்களுக்கான நஷ்டத்தை சரிக்கட்ட வழிமுறைகளை கண்டறியலாம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடியைத் தேடாமல் நேரடியான பார்வையை ஏற்படுத்துவதுதான் ஆரோக்கியமான சினிமாவை
உருவாக்கும்.

பத்திரிகைகள் நல்லபடியாக விமர்சனங்களை எழுதும் போது எந்த மேடையிலாவது பாராட்டி பேசியது உண்டா.நல்லது செய்யும்போது கண்டுகொள்ளாத திரையுலகம் விமர்சிக்கும்போது கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது.

இத பேச்சு மூலம் நெருப்புடா நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் ஏன் ரஜினிகாந்த் முதல் பாரட்டினர் அதோடு ரஜினி தன் மனதில் வைத்து இருந்த பல பாரத்தையும் இதன் மூலம் இறக்கினார்.

அதாவது இவர் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எப்படி பேசுவது என்று தெரியாமல் தவித்த ரஜினிக்கு இந்த மேடை மிகவும் பயன்படுத்திகொண்டனர் ரஜினி பல நாட்களாக பேசமுடியாமல் இருந்த லிங்கா மற்றும் கபாலி பிரச்சனையை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் தாணு இருவர் முன் பேசி தீர்த்து கொண்டார். ஒருவகையில் ரஜினிக்கு லாபம் ஆனால் இந்த விழாவின் நோக்கம் நிறையடயவில்லை வந்தவர்கள் நெருப்புடா இசைமற்றும் ட்ரைலர் பற்றி பேசவில்லை விஷால் பேசியதுக்கு ஜால்ரா தான் அடித்தனர். விஷாலோ ஒட்டு மொத்த ஊடககங்களின் கோவத்துக்கு ஆளாகிவிட்டார்.

ஊடககார்கள் முதலில் முடிந்தால் பைரசி ஒழித்து விட்டு சினிமாவை காப்பற்றுங்கள் என்று பேச ஆரம்பித்துள்ளனர் . விஷால் இதை உங்களால் முடியுமா இந்த சவாலை ஏற்க முடியுமா ?

Leave a Reply