
உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம் 2 என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் எழுதி, இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கமல் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.
விஸ்வரூபம் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகே வெளியானது. பிரச்சனைகளால் கமல் கண் கலங்கியதுடன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறினார். விஸ்வரூபம் 2 எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸாகும் என்று நம்புவோமாக.
விஸ்வரூபம் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளித் தள்ளிப் போனது. இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
