
சமீபகாலமாக அஜித் அவர்களின் விஸ்வாசம் படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகிறது அனால் எல்லாத்துக்கும் அமைதிகாக்கும் இயக்குனர் சிவா மற்றும் படக்குழு யார் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று சொவாதில் ஏன் இப்படி ஒருதயக்கம் என்று தெரியவில்லை படத்தின் டைட்டில் அறிவித்த இவர்களுக்கு யார் யார் என்று சொல்லவதில் இன்னும் தயக்கம் ஏன் என்றும் புரியவில்லை
சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. இதில் முன்பு கமிட்டாகியிருந்த யுவன் விலகினார் என சொல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விசுவாசம் படத்திற்கு இசையமைக்க போவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் அதனை மறுத்துள்ளார்.
ட்விட்டரில் நான் விசுவாசம் படத்திற்கு இசையமைக்கிறேன் என்று வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அஜித்தின் ரசிகன்.
நான் எதிர்காலத்தில் அஜித் படங்களுக்கு தீவிரமான பின்னணி இசை கொடுப்பேன். விரைவில் சில நல்ல தகவல்கள் என்னிடம் இருந்து வரும் என கூறியுள்ளார்
