
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. தற்போது இதன் தமிழக வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த போது, “ரஜினி படங்களுக்குப் பிறகு கடுமையான போட்டிக்கு இடையே வியாபாரமாகியுள்ளது. கண்டிப்பாக அஜித் படங்களில் விநியோக வியாபாரத்தில் இந்தப் படம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்கள், டீஸர், போஸ்டர்கள் என அனைத்துமே மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தான் இதற்கு காரணம்” என்று தெரிவித்தார்கள். மேலும் ‘விவேகம்’ வியாபாரத்தினால் தயாரிப்பாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.
