
அஜித்தின் விவேகம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகவும் பாதிக்கபட்டாலும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் இந்த படத்தை ஊடங்கள் மிக மோசமான விமர்சனம் கொடுத்தனர் இருந்தும் மக்கள் இந்த படத்துக்கு மிக பெரிய வரவேற்ப்பு கொடுத்துள்ளனர் என்று தான் சொல்லணும். ஊடகங்கள் ஏன் அஜித்தை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை
குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் என்பவர் அஜித் மற்றும் விவேகம் படத்தை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் விமர்சனம் செய்யும் அளவுக்கு மோசமான படம் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லணும் . இந்த விமர்சனத்தை மிகவும் கோவமாக கண்டித்தது முதலில் கோலிசோடா இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் மிகவும் வன்மையாக கண்டித்தார் படத்தை விமர்சனம் செய்யணும் வேணும் என்று தவறான வதந்தியை சொல்லகூடாது என்று கூறினார்.

தற்போது இவரை தொடர்ந்து பிரபல இயக்குனர் மற்றும் முன்னணி ஹீரோவான ராகவா லாரன்ஸ் பொறுத்தது போதும் – பொங்கி எழு’ பாணியில் இன்று பிற்பகல் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
’அஜீத் சாரின் ‘விவேகம்’ படம் பார்த்தேன். அந்த கடுமையான உழைப்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!. அதேவேளையில், இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு மக்கள் நிறையாகவும், குறையாகவும் அளித்துள்ள அனைத்து விமர்சனங்களையும் கண்டேன். ஆனால், நீலச் சட்டை மாறன் என்பவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தை கண்டு வலியும், வேதனையும் அடைந்துள்ளேன்.
இந்தப் படத்தில் உள்ள சிலாகிக்கத்தக்க காட்சிகளைப்பற்றியும், இதற்கான படக்குழுவினரின் உழைப்பைப் பற்றியும் அவர் ஒருவார்த்தைகூட கூறவில்லை. அவரது கருத்துகள் படத்திற்கான விமர்சனம்போல் தோன்றவில்லை, மாறாக, நடிகர் அஜீத் குமார் மற்றும் அவரது ரசிகர்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இது உள்ளது.
எனவே, சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதிபெறாத நீலச்சட்டை மாறன்மீது திரையுலகை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என தனது முகநூல் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
