Friday, April 12
Shadow

விவேகம் டிசர் சொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்.

தல ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த ‘விவேகம்’ படத்தின் டீஸர் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.01 மணிக்கு இணைய தளங்களில் வெளியிடப்பட்டது

டீஸரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கடந்த சில நாட்களாக ரசிகர்களுக்கு அதிகரித்திருந்தது. நாட்கள் நெருங்க நெருங்க டீஸர் இந்த சாதனை செய்ய வேண்டும், மாஸ் வரவேற்பு கொடுக்க வேண்டும் என பிளான் போட்டனர் ரசிகர்கள்.

அதன்படி விவேகம் பட டீஸரும் படக்குழு சொன்ன நேரத்தில் வெளியாகி இருந்தது.

சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுத்துள்ள இந்த படத்தின் டீஸர் லைக்சில் சாதனை படைத்தது வெளியிடப்பட்ட 50 நிமிடங்களில்

1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்சுகளை பெற்று ‘கபாலி’ படத்தின் டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. ‘கபாலி’ படத்தின் டீஸர் 1 லட்சம் லைக்சுகளை 1மணி நேரம் 30 நிமிடம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது?.

வெளியான முதலில் இருந்தே டீஸர் சாதனை தொடங்கிவிட்டது. தற்போது எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸை டீஸர் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.

கபாலி மட்டும் இல்லை பல சாதனைகள் இந்த டிசர் முறியடித்துள்ளது. நிச்சயம் இந்த படமும் பல சாதனைகள் பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை

10 Mins- 28K
16 Mins- 50K
20 Mins- 60K
25 Mins- 70K
30 Mins- 80K
38 Mins- 90K
45 Mins- 100K
1 Hr- 105.5K
6 Hr- 150K

Leave a Reply