
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்
ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவது ஒரு வெற்றி என்றால், அதே படத்தில் பணியாற்றிய வெவ்வேறு கலைஞர்களின் உழைப்பும் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவது இன்னொரு பெரிய வெற்றி. அந்த வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு தற்போது இரட்டிப்பு கொண்டாட்டம்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. தீவிரமான பின்னணியை கொண்டிருந்தாலும், அதை கனமான முறையில் சொல்லாமல் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேயம் கலந்து ரசிகர்களை அணுகிய விதம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
அந்த வரவேற்புக்கு தற்போது SIIMA விருதுகளும் கூடுதல் அங்கீகாரம் கொடுத்துள்ளன. 2026ஆம் ஆண்டுக்கான SIIMA விருதுகளில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மொத்தம் 6 விருதுகளை கைப்பற்றியுள்ளது.
விமர்சகர்கள் தேர்வு பிரிவில் சிறந்த திரைப்படம் என்ற விருதுடன், படத்தின் இயக்கம், நடிப்பு, நகைச்சுவை மற்றும் இசை என பல்வேறு துறைகளிலும் விருதுகள் கிடைத்துள்ளன.
அபிஷன் ஜீவிந்த் – சிறந்த அறிமுக இயக்குநர்
முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்துள்ளது. எளிமையான குடும்பக் கதைக்குள் ஒரு முக்கியமான சமூகப் பின்னணியை கொண்டு வந்து, அதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லிய விதத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
சசிகுமார் – சிறந்த நடிகர்
குடும்பத் தலைவனாகவும், சூழ்நிலைகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாகவும் நடித்த சசிகுமாரின் நடிப்புக்கும் விருது கிடைத்துள்ளது.
சிம்ரன் – சிறந்த நடிகை
கதையின் குடும்ப உணர்வுப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிம்ரனின் நடிப்பும் விமர்சகர்கள் பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.
இதனுடன் படத்தின் நகைச்சுவை களத்தை தாங்கிச் சென்ற யோகிபாபுவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைப் பிரிவிலும் படக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. விஜய் யேசுதாஸ் பாடிய பாடலுக்காக அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் விருது கிடைத்துள்ளது.
இவ்வாறு இயக்கம், திரைப்படம், நடிப்பு, நகைச்சுவை, இசை என படத்தின் பல்வேறு அம்சங்களுக்கும் விருதுகள் கிடைத்திருப்பது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவின் கொண்டாட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் சார்பில் நாசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
திரையரங்க வரவேற்பைத் தொடர்ந்து தற்போது SIIMA விருதுகளிலும் ஆறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றிருப்பதன் மூலம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தனது பயணத்தில் மற்றொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படைப்பிலிருந்து தொடங்கிய இந்தப் பயணம், திரைப்படம் முதல் நடிப்பு, இசை வரை பல்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருப்பது படக்குழுவுக்கு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்துள்ளது.

Tourist Family Adds Another Milestone to Its Journey With 6 SIIMA Awards
A film winning the love of audiences is one achievement. When the work of its director, actors, musicians and other artistes is recognised individually, it makes the success even more special. For the team of Tourist Family, there is now another reason to celebrate.
Starring Sasikumar and Simran and directed by debutant Abishan Jeevinth, Tourist Family revolves around the lives of Eelam Tamil refugees seeking refuge in Tamil Nadu. Despite dealing with a serious social backdrop, the film chose to tell its story through humour, family emotions and human values, making it accessible to a wider audience.
Following its positive theatrical reception, the film has now added another achievement to its journey at the 2026 SIIMA Awards, winning six awards across various categories.
The film received the Critics’ Choice Best Film award, while its director, lead actors, comedian and music contribution were also recognised.
Abishan Jeevinth Wins Best Debut Director
For Abishan Jeevinth, the SIIMA recognition marks a significant achievement with his very first film. His ability to bring a socially relevant backdrop into an engaging family entertainer has been one of the notable aspects of Tourist Family.
Sasikumar and Simran Honoured for Their Performances
Sasikumar won the Best Actor award for his performance as a family man navigating challenging circumstances. Simran was also recognised with the Best Actress award for her role in the film.
The film’s comic elements also received recognition, with Yogi Babu winning the Best Comedian award.
Adding to the film’s musical achievements, Vijay Yesudas won the Best Playback Singer – Male award for his song in the film.
With awards recognising the film, direction, acting, comedy and music, Tourist Family has secured six honours at SIIMA, making it a memorable occasion for the entire team.
The film has music by Sean Roldan, cinematography by Aravind Viswanathan and editing by Bharath Vikraman. Alongside Sasikumar, Simran and Yogi Babu, the cast includes Mithun Jai Shankar, Kamalesh, M. S. Bhaskar and Ramesh Thilak, among others.
Produced by Nazareth Basilian, Mahesh Raj Basilian and Yuvaraj Ganesan under the banners of Million Dollar Studios and MRP Entertainment, Tourist Family has continued to make an impact beyond its theatrical run.
From winning over audiences to receiving recognition across multiple categories at SIIMA, the film has added another significant milestone to its journey, with six awards celebrating different aspects of its filmmaking.
