
தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடக்கும் மிக பெரிய குடுமி பிடி சண்டை என்றால் அஜித் விஜய் இதில் யார் பெஸ்ட் என்பது தான் இதற்கு மேலும் தூபம் போடும் நடிகை தமன்னா ஆம் இவர்களில் யார் பெஸ்ட் என்று இவர் சொல்ல்கிறார் .
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல், தமிழ் சினிமா பட உலகின் உச்ச நடிகர்களாக இருந்து வரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர். அவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் பலவும் வெற்றிப் படங்களாக இகுக்கின்றன. அஜித், விஜய் இருவருடனும் சிம்ரன், திரிஷா, அசின், நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும், இருவருடனும் நடித்து முடித்த பின், அவர்கள் புராணம் பாடுவது வாடிக்கை.
அந்த வகையில், லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் நடிகை தமன்னா. உதயநிதியுடன், தமன்னா இணைந்து நடித்த கண்ணே கலைமானே படம் வெளியாகியுள்ளது. இப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட தமன்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது, எல்லா கேள்விகளுக்கும் தமன்னா வெளிப்படையாக பதில் அளித்தார்.

அப்போது, ஒரு நிருபர், நடிகர்கள் அஜித்,விஜய் இருவரில் யார் ஸ்மார்ட், ஹாட் என கேட்டுள்ளார். அதற்கு உடனே பதில் அளித்த தமன்னா, என்னைப் பொறுத்த வரையில், நான் அறிந்த வரையில் நடிகர் அஜித் எப்போதும் ஹாட்; நடிகர் விஜய் எப்போதும் ஸ்மார்ட் என்று பதிலளித்துள்ளார்.
