
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இதுவரை யார் பேச்சுக்கும் எந்த நடிகருடனும் மோதல் இந்த நடிகையுடன் அப்படி இப்படி என்று எந்த வித கிசுகிசுவும் வராத நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் சண்டை போட்டு போனாலும் தானே வழிய வந்து பேசும் இயல்புடையா சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய்யை பற்றி ஒரு விஷயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் அது என்ன தெரியுமா.
சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், நிவின் பாலி, துல்கர் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பர்சன் ஆப் தி இயர் (The Person of The Year ) விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு சிவகார்த்திகேயனிடம் விஜய் பற்றி கேட்டபோது. அவர் கூறியது :-
இந்திய சினிமாவின் சிறந்த என்டர்டெய்னர் என்றால் அது விஜய் சார் மட்டும் தான். மேலும் அவர் இதற்கு முன்பு எனக்கு விருது வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில், நான் சூப்பராக நடனம் ஆடுகின்றேன் என்றும் குழந்தைகளை நான் கவர்ந்துவிட்டேன் ’ என்று அவர் கூறியது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
‘விஜய் சார் அவ்ளோ உயரத்தில் இருக்கும் போது என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அன்று அவர் அப்படி கூறியதற்கு எப்போதும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன், மிகவும் நன்றி சார்’ என மேடையில் சிவா கூறினார்.
