Friday, August 19
Shadow

எய்தவன் – திரைவிமர்சனம் (சரியான இலக்கு ) Rank 3.5/5

இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த வாரம் என்று தான் சொல்லணும் ஏன் என்று தானே பாக்குறிங்க ஆமாங்க மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் தான் இந்த வாரம் வெளியாகிறது என்று சொல்லணும் நான்கு படங்கள் நான்கும் மிக முக்கிய சிந்தனைகள் மட்டும் இல்லை பார்க்கவும் மிக விறு விருப்பாக திரைகதை நடிப்பு திறமை என்று ஜொலித்து உள்ளனர். என்று தான் சொல்லணும்

லென்ஸ் படம் சிலர் இணையதளங்களில் செய்யும் சிறய தவறுகளால் எப்படி எல்லாம் பிரச்சனைகள் வரும் என்பதை சொன்ன படம் எய்தவன் கல்வி மோசடியை பற்றி சொல்லும் படம் சினிமா அப்பா நல்ல விஷயங்களை சொல்லி தான் வருகிறது.அந்த விஷயத்தில் இந்த படமும் ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படியாக கொண்டு தான் சொல்லி இருக்கும் படம் . சரி வாங்க படத்தை பற்றி பாப்போம்.

நடிகர்கள்: கலையரசன், சட்னா டைட்டஸ், ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணன், கவுதம், சரித்தரன், வினோத், ராஜ்குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – எஸ்.சுதாகரன், இயக்கம் – சக்தி ராஜசேகரன், பாடல்கள் – ந.முத்துக்குமார் மற்றும் கானா வினோத், ஒளிப்பதிவு – சி.பிரேம்குமார், இசை – பார்தவ் பார்கோ, படத்தொகுப்பு – ஐ.ஜெ.ஆலென்.

கல்வி நிறுவனங்களில் சட்டத்துக்கு புறம்பாக மாணவர்களின் குடும்பத்திடமிருந்து நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தையும், அங்கு நடக்கும் பண ஏமாற்று வேலைகளையும் சுட்டிக்காட்டும் படம் தான் இந்த “எய்தவன்” படத்தின் கதையின் கரு.

கலையரசன், அவருடைய தந்தை வேலா ராமமூர்த்தி, அவருடைய தாய், தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். கலையரசன் பணம் என்னும் கருவியை விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அந்த தொழிலில் அவருடைய நண்பர் ராஜ்குமாரும் ஈடுபட்டு வருகிறார். கலையரசனின் தங்கை தனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளுடைய மருத்துவ படிப்புக்கு அனுமதி தேடி கலையரசன் அலைகின்றனர்.

ஒருவழியாக தன்னுடைய தங்கையின் மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு தரகர் மூலமாக ரூ.53 லட்சம் நன்கொடையாக கொடுத்து அந்த கல்லூரியில் தன்னுடைய தங்கைக்கு அனுமது பெறுகிறார் கலையரசன்.

கல்லூரியில் அனுமதி பெற்ற சில நாட்களிலேயே, அந்த கல்லூரிக்கு ‘இந்திய மருத்துவ சங்கத்தின்’ லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக தான் கொடுத்த நன்கொடை பணத்தை திரும்ப தர கேட்டு, கல்வி நிர்வாகத்திடமும், தரகரிடமும் முறையிடுகிறார் கலையரசன். பிரச்சனை முற்றுகிறது, தரகர் தற்கொலை செய்து கொள்கிறார், தங்கை விபத்தில் இறந்து விடுகிறார்.

கலையரசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘இந்திய மருத்துவ சங்கத்தில்’ கல்லூரி மீது புகார் தெரிவிக்கின்றனர். கலையரசன் தன் தங்கை படிப்பிற்காக கொடுத்த பணத்தை கலையரசன் திரும்ப பெறுகிறாரா, மற்ற மாணவர்கள் படிப்பு என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.

கலையரசன் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்த்டுத்து நடிப்பது ஒரு பக்கம் நல்ல விஷயம் என்பது போல நடிப்பில் படத்துக்கு படம் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி வருகிறார் என்று தான் சொல்லணும். கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் வெளிபடுத்தி சபாஷ் வாங்குகிறார் நிச்சயம் தமிழ் சினிமாவில் இவருக்கு என மிக பெரிய இடம் காத்து இருக்கிறது . என்று தான் சொல்லனும்

சாட்டனா டைடஸ் இந்த படத்தை பொறுத்தவரை கொலு பொம்மை போல தான் வருகிறார் பிச்சைகாரன் படத்தில் நடித்த நடிப்பு எங்கே என்று அளவுக்கு தான் நடித்து இருக்கிறார் அவருக்கு என்ன வரும் என்று தெரிந்து இயக்குனர் அளவு கொள் வைத்து காட்சிகள் அமைத்து இருக்கிறார்.

இன்று இந்தியா முழுவதும் நடைபெறும் கல்வி கொள்ளையின், குறிப்பாக கேபிடேஷன் பீஸ் என்று சொல்லக்கூடிய நன்கொடை எவ்வாறு ஒரு ரசித்து இல்லாமல் கள்ளத்தனமாக பெறப்படுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகளும், பெற்றோர்களின் உழைப்பும் எவ்வாறு சின்னா பிணமாகிறது என்பதை பெற்றோர்கள் புரியும் விதத்தில் அருமையாக திரைக்கதை மற்றும் வாசன் அமைத்துள்ளார்கள் இயக்குனர் சக்தி ராஜசேகரன் .

கல்லூரி உரிமையாளரின் மகனாக, வில்லனாக வரும் கவுதம் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் அசத்துகிறார். அவருடைய இயற்கையான பார்வை அவருடைய கதாபாத்திரத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். கல்லூரி தரகராக வரும் வினோத் மற்றும் வில்லனின் கையாளாக வரும் வளவன் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் தங்களுடைய கதாபாத்திரங்களை அளவோடு கையாண்டுள்ளனர்.

மொத்தத்தில் இந்த ‘எய்தவன்’ வெறும் திரைப்படமல்ல! கல்வி கொள்ளையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடம்!!

மே 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிற ‘எய்தவன்’, அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம்.

மொத்தத்தல் எய்தவன் சரியான இலக்கு Rank 3.5/5

Leave a Reply