Thursday, April 25
Shadow

தேசிய விருது தனஞ்செயன் பம்மி, பதறி, மிரட்டுவது ஏன்?

தமிழ் சினிமாவில் தான் முன்னணி தயாரிப்பாளர் போலவும் தான் தான் மிக பெரிய அதிபுத்திசாலி என்றும் வளம் வருபவர் என்றால் அது தனஞ்செழியன் என்று சொல்லலாம் இவர் பணிபுரிந்த எல்லா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மூடு விழா நடத்தியவர் என்றும் இந்த உலகத்துக்கு எல்லோருக்கும் தெரியும் இவர் எழுதிய புத்தகம் தேசிய விருது வாங்கியது என்று இவருக்கு இவரே புகழ் சூடிகொண்டவர். இவருக்கு எதுக்கு தெரியுமா சினிமா சிறந்த விமர்சகர் என்று தான் விருது கொடுத்தனர்.

இதில் என்ன கொடுமை என்ன தெரியுமா இவர் தயாரித்த படங்கள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை என்பது தான் முக்கிய விஷயம் இந்த சிறந்த விமர்சகருக்கு ஒரு நல்ல கதை எது என்றும் வியாபார ரீதியாக எந்த திரைகதை அமையும் என்று தெரியாமல் படம் எடுத்து மிக பெரிய நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தியவர். ஆனால் ஒன்று இவர் பாக்கெட் மட்டும் நிறைந்து என்று தான் சொல்லணும். தன்னை நம்பி கோடி கோடியாக மொழி தெரியாத முதலாளிகளுக்கு பட்டை நாமம் போட்ட இவருக்கு என்ன தகுதி இருக்கு சினிமாவை விமர்சனம் பண்ண என்று தெரியவில்லை.

அதை விட இன்று பல இளைஞர்களின் வாழ்கையை போப்டா என்ற சினிமா கல்வி நிறுவனத்தின் மூலம் லட்ச கணிக்கில் பணம் வாங்கி அவர்களை இயக்குனர், நடிகர், எடிட்டர்,கேமேராமேன் ஆக்குகிறேன் என்று பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார். இந்த விருது எல்லாம் தன் கல்வி நிறுவனத்தை முன்னேற்ற பாதை கொண்டு செல்லவே குறுக்கு வழியில் வாங்கியுள்ளார் என்றும் கிசுகிசுக்கபடுகிறது.

இரண்டாவது முறையாக தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். முதல் முறை இவர் தொகுத்த ஒரு புத்தகத்துக்காக. இப்போது சிறந்த விமர்சகருக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.

எந்த அடிப்படையில் இவருக்கு விமர்சகர் விருது வழங்கப்பட்டது? என்னென்ன விமர்சனங்கள் எழுதினார்? திரைத்துறை குறித்த அவரது நடுநிலையான விமர்சனங்கள் என்ன? இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேட செய்தியாளர்கள் / தொழில்முறை விமர்சகர்கள் முனைந்த போதே, உஷாராகிவிட்டார் தனஞ்செயன். உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள், நிறுவனங்களை எச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘நாங்கள் தனஞ்செயன் லீகல் செக்ஷனிலிருந்து பேசுகிறோம். சாரைப் பற்றி எதாவது எழுதினால் நடவடிக்கை எடுப்போம்,’ என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறியுள்ளனர்.

எதுவுமே எழுதாத நிலையில், சில தகவல்களை விசாரிக்க ஆரம்பித்த உடனே தனஞ்செயன் பதறுவது ஏன்? சட்டத்தின் பெயரில் மீடியாவை மிரட்டுவது ஏன்? தன்னை ஒரு விமர்சகர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் செய்யும் வேலை இதுதானா? தன்னைப் பற்றி என்ன எழுதப் போகிறார்கள் என்பது தெரியும் முன்பே பதறிப் போய் தடுக்கப் பார்ப்பது எதற்காக? எனில் அவருக்கு இந்த விருது கிடைத்த பின்னணி குறித்து கட்டாயம் ஆராயப்பட வேண்டியது அவசியமல்லவா? இதற்காகவே ஆர்டிஐயில் இதுகுறித்த உண்மைத் தகவலை அறிய வேண்டியுள்ளதல்லவா?

ஒரு சிலரால் உலகத்தில் எந்த விருது வாங்கினாலும் தேசிய விருது போல வருமா என்று வாழும் சினிமா கலைஞர்களை அவமானம் படுத்துகிறார்கள் ஒரு சில சுயநலவாதிகள்.

Leave a Reply