
பொறம்போக்கு என்ற இசை ஆல்பம் ஒன்று புதிதாக வெளியிட போகிறார். நித்தியானந்தம் இது என்ன பொறம்போக்கு என்று தான் நாமும் அங்கு சென்றது சென்னை அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் வார்த்தை பொறம்போக்கு அதை நாம் கெட்ட வார்த்தையாகத்தான் பயன் படுத்துகிறோம் உண்மையில் பொறம்போக்கு என்றால் நிலம் அதாவது பொது மக்கள் பயன்படுத்தும் நிலம் குறிப்பாக மாடு மேய்ப்பது சந்தை இது மாதிரி மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் இடத்தை தான் பொறம்போக்கு என்று அழைப்பார்கள் ஆனால் அது காலபோக்கில் சென்னை மக்கள் அதை கெட்ட வார்த்தையாக பயன் படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளை புறம்போக்கு என்று சொல்லுவார்கள் என்பது பொருள் .
ஆனால் நாம் இப்ப பார்க்க இருப்பது பொறம்போக்கு என்ற இசை தொகுப்பை ஒரு தன் ஆர்வலர்கள் தயாரித்து வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்பது இது வர்த்தக ரீதியாக சம்பாதிக்க வா என்று பார்த்தால் இல்லை எண்ணூர் மக்களின் கஷ்டங்களை சொல்லும் பாடலாக தான் இந்த பாடல் உருவாகி உள்ளது . அதாவது ஆக்கிரமிப்பு என்பதால் இன்றைய சுற்று சுழல் எந்த அளவுக்கு பாதிக்க பட்டுள்ளது என்பதை உணர்த்தும் பாடல் தான் இது. எண்ணூரில் இருந்த ஆறு இன்று எந்த அவலநிலையில் உள்ளது இதனால் மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உண்டாகியுள்ளது என்பது உணர்த்தும் பாடல்தான் இந்த பாடல்

இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் கர்நாடக இசை மேதை T.M.கிருஷ்ணா தான் இந்த பாடலை பாடியுள்ளார் ஒரு கர்நாடக பாடகர் நிச்சயம் சென்னை தமிழை அதுவும் பொறம்போக்கு என்று பாடமாட்டார்கள் அதை துணிந்து பாடை இருப்பது நாம் அனைவரும் கண்டிப்பாக பாடியே ஆகவேண்டும் இதை பற்றி அவரிடம் கேட்டதுக்கு எனக்கு சென்னை என்றால் அது பாரிஸ் கார்னர் வரை தான் தெரியும் அடுத்து பர்மா பஜார் தெரியும் அதை தாண்டி நான் போனது இல்லை என்னை முதல் முதலில் எண்ணுருக்கு என்னை நித்தியானந்தம் அழைத்து சென்று அந்த இடங்கள் பற்றி விவரித்தார் பின்னர் தான் எனக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியும் அதை விட இந்த மக்கள் படும் அவஸ்தையை நான் புரிந்து கொண்டேன் பின்னர் தான் யார் எதிர்த்தாலும் பரவாயில்லை என்று இந்த பாடலை நான் பாட அதுவும் கர்நாடக இசையில் பாட சம்மதித்தேன் என்று கூறினார் பாடகர் T.M.கிருஷ்ணா அதுமட்டும் இல்லாமல் அந்த இடத்துக்கு சென்று இந்த பாடலின் படபிடிப்பை நடத்தியுள்ளனர் அதுவும் பாடகர் கிருஷ்ணா அடுத்து இசைவித்துவான்கள் எல்லோரும் அங்கே சென்று படபிடிப்பு நடத்தியுள்ளனர் . இந்த பாடலை இயக்கிய இயக்குனருக்கும் ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து நிச்சயம் பாரட்டவேன்டியே ஆகவேண்டும் ஒரு வர்த்தக ரீதியான பாடலை விட அழகாக இயக்கி படம் பிடித்துள்ளனர். இந்த பாடலுக்காக உழைத்த அனைவரும் இலவசமாக பணி புரிந்துள்ளனர் என்பது மேலும் சிறப்பு
இந்த பாடல் உங்களுக்காக இணைக்க பட்டுள்ளது
