Monday, August 10
Shadow

10 ஆண்டுகள்… 100 நாட்கள்… எண்ணற்ற திருப்பங்கள்! ‘பிக்பாஸ் தமிழ் 10’ கொண்டாட்டத்திற்கு விஜய் சேதுபதி அழைப்பு

10 ஆண்டுகள்… 100 நாட்கள்… எண்ணற்ற திருப்பங்கள்! ‘பிக்பாஸ் தமிழ் 10’ கொண்டாட்டத்திற்கு விஜய் சேதுபதி அழைப்பு

சென்னை, ஆகஸ்ட் 7, 2026:
தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு உலகில் கடந்த பத்து ஆண்டுகளாக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு சீசனிலும் புதிய எதிர்பார்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் ‘பிக்பாஸ் தமிழ்’, தற்போது தனது 10வது சீசனை பிரம்மாண்டமாக கொண்டாட தயாராகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10 ஆண்டுகால வெற்றிப் பயணத்தை முன்னிட்டு, ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் இணைந்து புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளன. வழக்கமான ஒரு புதிய சீசன் அறிமுகமாக இல்லாமல், பிக்பாஸ் பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்த 10வது சீசன் அமையவுள்ளது.

கடந்த ஒரு தசாப்தத்தில், பிக்பாஸ் தமிழ் என்பது வெறும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்ற எல்லையைத் தாண்டி, தமிழக மக்களின் அன்றாட பொழுதுபோக்கு உரையாடல்களில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறியுள்ளது. போட்டியாளர்களின் நடவடிக்கைகள், வீட்டுக்குள் உருவாகும் நட்பு, கருத்து வேறுபாடுகள், சவால்கள், எதிர்பாராத திருப்பங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சி மட்டுமின்றி டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் நீளும் பிக்பாஸ் பயணம், வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை மட்டுமல்லாமல், அவர்களை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்களையும் ஒரு தனி பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதனால் தான் பிக்பாஸ் தமிழ் இன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தாண்டி, ரசிகர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக மாறியுள்ளது.

ரசிகர்களுக்காக உருவாகும் ‘கார்னிவிழா’

பிக்பாஸ் தமிழ் தனது 10வது சீசனை முன்னிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘கார்னிவிழா’ என்ற பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

பிக்பாஸ் ரசிகர்கள் கடந்த காலங்களில் ரசித்த அனைத்து முக்கிய அம்சங்களையும் ஒருங்கிணைத்து, புதிய அனுபவத்துடன் வழங்கும் வகையில் இந்த ‘கார்னிவிழா’ உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, இந்த 10வது சீசன் ஒரு புதிய தொடக்கமாக மட்டுமின்றி, கடந்த பத்து ஆண்டுகளின் நினைவுகளை கொண்டாடும் தருணமாகவும் அமையவுள்ளது.

இதனை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள புதிய லாஞ்ச் புரோமோவில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ரசிகர்களை 10வது சீசனின் பிரம்மாண்டமான ‘கார்னிவிழா’ கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறார்.

“இங்க ஒன்னு நினைச்சா… பத்து நடக்கும்!”

இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், “இங்க ஒன்னு நினைச்சா… பத்து நடக்கும்” என்ற வித்தியாசமான வாசகமும் புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதையும், ஒரு சிறிய நிகழ்வு கூட எதிர்பாராத பல திருப்பங்களுக்கு வழிவகுக்கலாம் என்பதையும் இந்த வாசகம் உணர்த்துகிறது. போட்டியாளர்களின் திட்டங்கள், சவால்கள், உறவுகள், கருத்து மோதல்கள் என ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் நகரும் பிக்பாஸ் உலகத்தின் தன்மையை இந்த வரி பிரதிபலிக்கிறது.

10வது சீசன் என்பதால், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையில் அதிக உற்சாகம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிகழ்ச்சியை உருவாக்கும் முயற்சியில் பிக்பாஸ் தமிழ் குழு இறங்கியுள்ளது.

10 ஆண்டுகால வெற்றியை கொண்டாடும் 10வது சீசன், ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘கார்னிவிழா’, 100 நாட்கள் தொடரும் பொழுதுபோக்கு விருந்து என, பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இந்த ஆண்டு மிகப்பெரிய பொழுதுபோக்கு கொண்டாட்டமாக உருவெடுக்க உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 விரைவில் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தளங்களில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது. இதன் மூலம் மற்றொரு பரபரப்பான பிக்பாஸ் பயணத்தை தொடங்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

ஜியோஹாட்ஸ்டார் பற்றி

ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து உருவான ஜியோஹாட்ஸ்டார், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல்வேறு வகையான பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள், புதுமையான தொழில்நுட்ப அனுபவங்கள் மற்றும் பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையும் வகையிலான வசதிகளுடன், இந்திய பார்வையாளர்களின் டிஜிட்டல் பொழுதுபோக்கு அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

10 Years, 100 Days and Countless Twists! Vijay Sethupathi Invites Fans to the Grand ‘Bigg Boss Tamil 10’ Carnival

Celebrating a Decade of Bigg Boss Tamil with a Mega Entertainment Extravaganza; Star Vijay and JioHotstar Unveil New Launch Promo

Chennai, August 7, 2026:
After a remarkable decade of entertaining audiences and becoming one of Tamil television’s most talked-about reality franchises, Bigg Boss Tamil is all set to mark its milestone 10th season with an even bigger celebration.

Marking this significant milestone, Star Vijay and JioHotstar have unveiled the new launch promo for Bigg Boss Tamil Season 10, promising fans an exciting new chapter filled with entertainment, surprises and the trademark unpredictability of the Bigg Boss house.

Over the past ten years, Bigg Boss Tamil has grown far beyond being just a reality television show. It has become an integral part of Tamil Nadu’s entertainment culture, bringing families together for 100 days every year while sparking conversations across television, digital platforms and social media.

From the contestants’ relationships and rivalries to unexpected alliances, challenges and dramatic twists, the show has consistently managed to keep audiences engaged throughout its journey. Its impact has extended beyond the television screen, making Bigg Boss Tamil a cultural entertainment phenomenon with a strong and passionate fan base.

A Decade of Bigg Boss, Celebrated as a Grand ‘Carnival’

As Bigg Boss Tamil steps into its 10th season, the franchise is turning the milestone into a special celebration for the millions of fans who have been part of its journey over the last decade.

The ‘Carnival’ has been conceptualised as a grand entertainment celebration that brings together the elements fans have loved about Bigg Boss over the years, while offering a fresh and exciting experience for the new season.

The newly released launch promo captures the spirit of this celebration and highlights how Bigg Boss Tamil has evolved from being merely a television programme into an everyday part of the lives of its viewers.

Adding to the excitement, Vijay Sethupathi, who returns as the host, warmly invites fans to be part of the grand ‘Carnival’ celebrating the 10th season of Bigg Boss Tamil.

“Think of One… Ten Will Happen!”

The new season comes with the intriguing tagline, “Inga Onnu Ninaicha… Pathu Nadakkum” — meaning, “Think of one thing… ten things will happen!”

The line perfectly captures the unpredictable nature of the Bigg Boss house, where a single thought, decision or incident can lead to multiple unexpected twists.

With contestants, tasks, relationships, strategies and confrontations unfolding inside the house, Bigg Boss Tamil Season 10 promises to take unpredictability and entertainment to a whole new level.

As the franchise celebrates 10 years of success, the milestone season brings together the grand ‘Carnival’ celebration and 100 days of non-stop entertainment, making Bigg Boss Tamil Season 10 one of the most anticipated entertainment events of the year.

The grand celebration is set to begin soon, exclusively on Star Vijay and JioHotstar.

About JioHotstar

JioHotstar, formed through the coming together of JioCinema and Disney+ Hotstar, is one of India’s leading streaming platforms. With a diverse range of content, innovative technology and accessible entertainment experiences, JioHotstar aims to further enhance the way audiences across India consume and experience entertainment.