Sunday, August 9
Shadow

நடிகராக அறிமுகமான கொட்டாச்சியின் புதிய முயற்சி… ‘மாயக் காளான்’ படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்!

நடிகராக அறிமுகமான கொட்டாச்சியின் புதிய முயற்சி… ‘மாயக் காளான்’ படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார்!

குமிலியின் மலைப்பகுதியில் உருவாகும் சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் கொட்டாச்சி, தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். தான் கதாநாயகனாக நடிக்கும் ‘மாயக் காளான்’ திரைப்படத்தை இயக்குநராகவும் பொறுப்பேற்று இயக்கி வருகிறார்.

பல திரைப்படங்களுக்கு பைனான்ஸியராக இருந்து திரைத்துறையுடன் நீண்ட காலமாகப் பயணித்து வரும் ராஜேஸ்வரி பிச்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் ஜி. முத்துக்குமார், முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கும் திரைப்படம் ‘மாயக் காளான்’. திரைப்படத் தயாரிப்பில் புதிய பயணத்தைத் தொடங்கும் அவருக்கு, இந்தப் படம் முக்கியமான படைப்பாக அமைகிறது.

சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குமிலி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளும், இதுவரை பல முக்கியமான திரைப்படங்களின் காட்சிகளுக்கு பின்னணியாக அமைந்த படப்பிடிப்பு தளங்களும் ‘மாயக் காளான்’ படத்தின் கதைக்களத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ‘கும்கி’, ‘மைனா’ உள்ளிட்ட திரைப்படங்களின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட அதே பகுதிகளில் ‘மாயக் காளான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால், இயற்கையான சூழலோடு இணைந்த மர்மம் மற்றும் பரபரப்பை திரையில் உருவாக்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனான கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி. பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கதையின் சஸ்பென்ஸ் அம்சத்தை வலுப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், குமிலியின் இயற்கையான நிலப்பரப்பு படத்தின் கதையோட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பார்வையாளர்களை அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்க வைக்கும் வகையில் திரில்லர் அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.

சுரேஷ் ஜி. முத்துக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் இசையமைக்கிறார். ஆசிப் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். லோகேஷ் படத்தொகுப்புப் பணியை கவனிக்கிறார். மக்கள் தொடர்புப் பணிகளை பிஆர்ஓ கோவிந்தராஜ் மேற்கொண்டு வருகிறார்.

நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமான கொட்டாச்சி, தற்போது இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இரட்டை பொறுப்பை ஏற்றிருப்பதால், ‘மாயக் காளான்’ அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமிலியின் மலைப்பாதையில் தொடங்கியிருக்கும் ‘மாயக் காளான்’ பயணம், திரையில் எந்த அளவுக்கு மர்மத்தையும் பரபரப்பையும் உருவாக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Actor Kottachi Turns Director with ‘Maayak Kaalan’, Also Playing the Lead Role

Suspense thriller currently being shot in Kumily at the scenic locations of ‘Kumki’ and ‘Mynaa’

Actor Kottachi, who has established a presence in Tamil cinema through comedy and character roles, is now taking on a new challenge in his career. He is making his directorial debut with ‘Maayak Kaalan’, in which he also plays the lead role.

The film marks the first production venture of Suresh G. Muthukumar of Rajeswari Pictures, who has been associated with the film industry as a financier for several movies. With ‘Maayak Kaalan’, he is stepping into film production for the first time.

Directed by Kottachi and featuring him in the lead, the film is being made as a suspense thriller. The shooting is currently progressing at a brisk pace in Kumily, with the picturesque surroundings adding to the mood and atmosphere of the story.

Interestingly, the film is being shot at locations where popular Tamil films such as ‘Kumki’ and ‘Mynaa’ were previously filmed. The lush natural landscapes and distinctive terrain of Kumily are being effectively incorporated into the film to enhance its suspenseful and thrilling elements.

The movie features an ensemble cast comprising Ganesh, grandson of legendary actor Nagesh, Rajith, Kajesh, Vaiyapuri, Kadhal Sugumar, K.C. Prabath, Haritha, Mammukka and Rajan, among others.

With suspense and thriller elements at its core, ‘Maayak Kaalan’ is being crafted with a screenplay designed to keep audiences engaged and curious about what unfolds next. The natural locations of Kumily are expected to play an important role in establishing the mysterious atmosphere of the film.

Santhosh is composing the music, while Aseef handles the cinematography and Lokesh is in charge of the editing. PRO Govindaraj is handling the film’s publicity and public relations.

For Kottachi, ‘Maayak Kaalan’ marks an important new chapter as he takes on the dual responsibility of director and lead actor. With its intriguing premise, suspense-driven narrative and striking hill-country locations, the film is expected to offer audiences an engaging thriller experience.

The team is currently moving ahead with the shoot in Kumily, and expectations are building around what Kottachi’s first directorial venture has in store for audiences.