
தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும் அதே போல ஒரு பாணியை கடைபிடிப்பார்கள் ஆனால் அதற்கு விதி விளக்கு என்றால் அது நம்ம விஜய் ஆண்டனி என்று சொல்லணும் சினிமாவின் மூடத்தனம் என்று சொல்லப்படும் நெகடிவ் செண்டிமெண்ட்யில் வெற்றி பெற்றவர் என்று தான் சொல்லனும் ஒரு படம் இல்லை இரண்டு படம் இல்லை தொடர்ந்து இதை கடைபிடித்து வருகிறார் வெற்றியும் கண்டுவருகிறார் அந்த வகையில் இந்த எமன் படத்தில் என்ன என்று பாப்போம்.
விஜய் ஆண்டனி மியா ஜார்ஜ் தியாகராஜன் மாரிமுத்து அருள் D சங்கர சங்கிலிமுருகன் சார்லி சக்தி சாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இசையில் ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் வசனம் என பல பொறுப்புகளோடு இயக்கியுள்ளார் ஜீவா சங்கர்.
ிறு வயதிலேயே பெற்றோரை இழந்த விஜய் ஆண்டனி தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட தான் செய்யாத குற்றத்திற்கு பொறுப்பேற்று ஜெயிலுக்கு செல்கிறார். மாரிமுத்து, ஜெயக்குமார் ஆகிய இருவரின் அறிமுகம் ஜெயிலில் கிடைக்கிறது. அவர்களுடன் நெருக்கமாக பழகும் விஜய் ஆண்டனிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வான தியாகராஜனை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அவருடன் பழக்கத்தில் இருக்கிறார்.
தியாகராஜனை கொல்ல திட்டமிடும் மாரிமுத்து, ஜெயக்குமார் இந்த சூழ்ச்சியில் விஜய் ஆண்டனியை சிக்கவைக்க திட்டம் தீட்டுகின்றனர். இதனை தெரிந்துகொண்ட தியாகராஜன் விஜய் ஆண்டனியை வைத்தே அவர்கள் இருவரையும் தீர்த்துகட்டுகிறார். அதன்மூலம் தியாகராஜனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்ற ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள்ஜோதி விஜய் ஆண்டனியையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதற்கிடையில், விஜய் ஆண்டனியின் தோழியான மியா ஜார்ஜுக்கு அருள்ஜோதியின் மகன் தொல்லை கொடுக்கிறார்.
இதிலிருந்து தப்பிக்க அரசியலில் நுழையும் விஜய் ஆண்டனி, அவருக்கு எதிரான தடைகளை தகர்த்து, சூழ்ச்சிகளை எவ்வாறு முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை
முதல் முறையாக இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி அப்பா மகனாக நடித்துள்ளார் அரசியல்வாதியாக மிக சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் மூலம் மாஸ் ஹீரோ ஆகவும் முயற்சி எடுத்துள்ளார் என்று தான் சொல்லணும். அப்பா மகன் பாத்திரத்தை உணர்ந்து இருவருக்கும் வேறு வேறு ஸ்டைல் நடிப்பு வசன உச்சரிப்பு என்று மிகவும் கவனமாக செய்துள்ளார். எப்பவும் போல காதல் காட்சிகளில் படு சொதப்பல் சுத்து போட்டாலும் காதல் என்றால் என்ன அதன் விலை என்ன என்ற அளவுக்கு தான் நடிப்பு வருது என்று சொல்லணும்.
மியா ஜார்ஜ் முதல் முறையாக மாடன் பொண்ணாக நடித்துள்ளார். அதுவும் ஒரு நடிகையாகவே நடித்துள்ளார் என்ன அவருக்கு குடும்ப பாத்திரம் தான் ஓகே மார்டன் சுத்தமா வரவில்லை குறைந்த காட்சிகள் வந்தாலும் தனக்கு கொடுத்ததை செய்து முடித்துள்ளார் என்று தான் சொல்லணும்
அரசியல்வாதியாக வரும் தியாகராஜன் அந்த இடத்திற்கு தேவையானவற்றை சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அரசியல்வாதியின் அத்தனை அம்சங்களும் அவருக்கு சரியாக பொருந்தியிருக்கின்றன. சிறப்பான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
புதிய நடிகர் என்று சொல்ல முடியாது சில விளம்பர படங்கள் மற்றும் ஒரு சில திரைப்படங்களும் நடித்துள்ள நடிகர் அருள் D சங்கர தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு சிறந்த நடிகர் என்று சொல்லலாம் தனக்கு கொடுத்த மந்திரியாகவே வாழ்ந்துள்ளார் ஒரு சிறந்த வில்லன் நடிகர் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லலாம். அதே போல சார்லி எப்பவும் போல தன் பாத்திரத்தை உணந்து நடித்துள்ளார் .
இயக்குனர் ஜீவா ஷங்கர் சிறந்த வசனகர்த்தா என்று சொல்லணும் படத்தின் வசனங்கள் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மேலும் ஒரு அரசியல் படம் என்று தான் சொல்லணும். புது விதமான கதை காட்சிகள் என்று எல்லாம் சொல்லமுடியாது. எப்பவும் போல உள்ள ஒரு படம் தான் மேலும் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்று தான் சொல்லணும் குறிப்பாக முதல் பகுதி கொஞ்சம் வளவள நீளம் என்று தான் சொல்லணும் இரண்டாம் பகுதி ரசிக்க வைக்கும் காட்சிகள்
படத்துக்கு இசை மிக பெரிய பலம் பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு பொருத்தமாக அமைத்துள்ளது ஒளிப்பதிவு அருமை குறிப்பாக விஜய் ஆண்டனி மியா மியா ஜார்ஜ் காதல் பாட்டு அருமையான காட்சியமைப்பு.
மொத்தத்தில் எமன் பாச கையறு Rank 3/5
