Saturday, May 16
Shadow

“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”

“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்கென தனி அடையாளம் பெற்றுள்ள தயாரிப்பு நிறுவனமான Vels Film International, தனது 32வது தயாரிப்பை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. “96”, “மெய்யழகன்” போன்ற மனதை வருடிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் C. Prem Kumar, இம்முறை மலையாள திரையுலகின் திறமையான நடிகர் சகத் பாசில் உடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார்.


படத்தின் பூஜை இன்று எளிமையுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டணி பற்றிய செய்தியே தற்போது திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உணர்வுகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் பகத் பாசில் — இந்த இருவரின் இணைப்பு, இயல்பாகவே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், தொடர்ந்து வணிகரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் வெற்றிப்படங்களை வழங்கி வருகிறது. புதிய முயற்சிகளுக்கும், புதுமையான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் இந்த நிறுவனம், இந்த புதிய படத்தின் மூலம் மீண்டும் தரமான சினிமாவை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளது.


இயக்குநர் பிரேம்குமார் தனது முந்தைய படங்களில் போலவே, மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கையின் நுணுக்கங்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய அனுபவத்தை இந்த படத்தின் மூலம் தரவுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, பகத் பாசிலின் இயல்பான நடிப்பும், பிரேம்குமாரின் அழுத்தமான கதையம்சங்களும் இணையும் போது, தமிழ் சினிமாவிற்கு ஒரு நினைவில் நிற்கும் படைப்பு உருவாகும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், “96” படத்தின் இசையால் பெரும் வரவேற்பைப் பெற்ற கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுமையான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. தற்போது முதல் கட்ட அறிவிப்பிலேயே பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த திரைப்படம், அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After “96”, Director Prem Kumar Embarks on a New Emotional Journey with Fahadh Faasil — Vels Film International’s Grand New Beginning!

, one of Tamil cinema’s most reputed production houses known for delivering quality entertainers, has officially launched its 32nd production venture amidst huge excitement. Directed by , the filmmaker behind emotionally celebrated films like “96” and “Meiyazhagan,” the new project marks his first-ever collaboration with acclaimed Malayalam actor .

The film was launched today with a traditional pooja ceremony held in a grand yet elegant manner. More than the launch itself, it is this powerful combination that has now become the talk of the industry. Director Prem Kumar, known for creating deeply emotional and relatable cinema, joining hands with Fahadh Faasil, an actor celebrated for his unconventional and impactful performances, has naturally generated massive anticipation among audiences and film circles alike.

Led by producer , Vels Film International has consistently backed films that have succeeded both commercially and critically. The banner, known for supporting fresh narratives and unique storytelling, is now gearing up to offer yet another memorable cinematic experience through this ambitious new venture.

Industry insiders believe that, much like his previous films, Prem Kumar will once again explore human emotions, relationships, and life’s subtle realities in a deeply moving manner. Combined with Fahadh Faasil’s effortless screen presence and powerful acting style, the film is already being looked upon as one of the most promising projects in recent times.

Adding further excitement, acclaimed composer , who created magic with the music of “96,” reunites with Prem Kumar for this film as well.

The makers have also confirmed that official announcements regarding the rest of the cast and technical crew will be revealed soon. Even with its very first announcement, the film has already captured widespread attention, and the upcoming updates are expected to further elevate the excitement surrounding this highly anticipated project.