
போஸ்ட் புரொடக்ஷனில் வேகமெடுக்கும் ‘ஹைக்கூ’… டப்பிங் பணியை தொடங்கிய நாயகன் ஏகன்!
சென்னை:
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் முக்கிய அங்கமாக, சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார்.
எழுத்தாளர்-இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது டப்பிங், பின்னணி இசை, ஒலிக்கலவை உள்ளிட்ட இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “‘ஹைக்கூ’ திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டப் பணியும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் காட்டிய அர்ப்பணிப்பும், ஒழுக்கமும், கடின உழைப்பும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அதே அர்ப்பணிப்புடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் தரமான படைப்பாக ரசிகர்கள் முன் ‘ஹைக்கூ’வை கொண்டு வர முழு குழுவும் இரவு பகலாக உழைத்து வருகிறது” என்றனர்.
படத்தின் கூடுதல் திரைக்கதையை ஹரி ஹரன் ராம் எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் மீது திரையுலகில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இது, படத்தின் கதை மற்றும் உள்ளடக்கத்தின் மீது முன்னணி ஓடிடி தளம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘Haiku’ Enters Post-Production; Actor Egan Begins Dubbing for Vision Cinema House Production
Chennai:
The upcoming film Haiku, produced under the Vision Cinema House banner, has entered an important phase of post-production following the successful completion of its shoot. Marking this milestone, lead actor Egan officially commenced the dubbing process with a simple pooja ceremony held in Chennai.
Written and directed by Yuvaraj Chinnasamy, Haiku is produced by Dr. T. Arulanandhu and Matthew Arulanandhu under the Vision Cinema House banner. The film stars Egan, Femina George, and Sridevi in pivotal roles.
The film was extensively shot across Kerala, Coimbatore, and Chennai, with principal photography wrapping up recently. The team has now shifted its focus to post-production, including dubbing, background score, sound design, and other finishing work.
Speaking about the commencement of dubbing, producers Dr. T. Arulanandhu and Matthew Arulanandhu said:
“The dubbing work for Haiku has now begun. We are delighted by the dedication, discipline, and sincere efforts shown by our director, actors, and technicians throughout every stage of the production. Every phase of the shoot was completed exactly as planned, and we are confident that the same commitment will continue during post-production. Our entire team is working tirelessly, day and night, to bring Haiku to audiences at the earliest as a quality cinematic experience.”
The film’s additional screenplay has been written by Hari Haran Ram, while Priyesh Gurusamy has handled the cinematography. Sakthi Pranesh serves as the editor, Siddhu Kumar has composed the music, and Prem is the production designer.
Adding to the excitement surrounding the project, Netflix acquired the film’s post-theatrical digital streaming rights even before the completion of principal photography. The early acquisition reflects the streaming giant’s confidence in the film’s story and emotional narrative.
With dubbing now progressing at a brisk pace, the makers are expected to announce more official updates, including the film’s release plans, in the coming weeks.
