
விஜய் ஆண்டனி பிறந்தநாளில் ZEE5-ன் சிறப்பு பரிசு… குடும்பங்களை சிந்திக்க வைக்கும் ‘நூறு சாமி’ ஆகஸ்டில் OTT வருகை!
சென்னை, ஜூலை 24, 2026:
வணிக ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களை மட்டுமல்லாமல், சமூகத்தில் விவாதத்தை உருவாக்கும் தரமான கதைகளையும் தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து வரும் ZEE5 தமிழ், விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த முக்கிய OTT வெளியீடாக ‘நூறு சாமி’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
சமீபத்தில் ZEE5-ல் வெளியான ‘பரிமளா & கோ’ திரைப்படம் அனைத்து தரப்பு குடும்ப பார்வையாளர்களிடமும் அமோக வரவேற்பைப் பெற்று, OTT தளத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்தது. ஜெயராம் – ஊர்வசி இணைந்து நடித்த இந்த திரைப்படம், குடும்ப உறவுகளையும் நகைச்சுவையையும் அழகாக இணைத்து ரசிகர்களின் மனதை வென்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்ட குடும்பப் படைப்பாக ‘நூறு சாமி’ தற்போது பார்வையாளர்களை சந்திக்க வருகிறது.
உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் உருவான இந்த திரைப்படம், கணவரை இழந்த பிறகு தனது மகனையும் குடும்பத்தையும் மட்டுமே உலகமாகக் கருதி வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. பல ஆண்டுகள் தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை ஒதுக்கி வைத்திருந்த அந்த தாய், தனது வாழ்க்கையின் நடுப்பகுதியில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, குடும்ப உறவுகள், கிராம மக்கள் மற்றும் சமூக மரபுகள் என பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். அந்தப் போராட்டத்திற்குள் மனிதநேயம், அன்பு, சுயமரியாதை மற்றும் வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் தைரியம் ஆகியவை அழுத்தமாக பேசப்படுகின்றன.
இந்தக் கதையின் மிகப்பெரிய பலம், தாய் – மகன் உறவின் உணர்வுப்பூர்வமான சித்தரிப்பாகும். வழக்கமாக ஒரு தாயின் தியாகத்தை மட்டுமே மையப்படுத்தும் கதைகளிலிருந்து விலகி, தனது தாயின் மகிழ்ச்சியே முக்கியம் என்று நினைக்கும் மகனின் மனநிலையை இந்த திரைப்படம் மிகவும் இயல்பாக பதிவு செய்கிறது. சமூக விமர்சனங்களைக் கூட பொருட்படுத்தாமல், தன் தாயின் புதிய வாழ்க்கைக்குத் துணை நிற்கும் மகனின் பார்வை, இந்த திரைப்படத்தை மேலும் வித்தியாசப்படுத்துகிறது.
‘நூறு சாமி’ ஒரு தனித்தாய் பற்றிய கதை மட்டுமல்ல; பெண்களின் வாழ்க்கை, மறுமணம், குடும்ப பொறுப்புகள், தியாகம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் போன்ற பல முக்கியமான அம்சங்களை பேசும் படைப்பாகவும் இது உருவாகியுள்ளது. அதனால், அனைத்து தலைமுறையினரையும் சிந்திக்க வைக்கும் குடும்பத் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியானபோது ஆரம்பத்தில் அமைதியான வரவேற்பைப் பெற்ற இப்படம், நேர்மறையான ரசிகர் விமர்சனங்களின் மூலம் இரண்டாவது வாரம் முதல் நல்ல வசூலைப் பெற்று, தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக அதன் கதைக்களமும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
இதுகுறித்து ZEE5 தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ், மலையாள வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறுகையில்,
“இன்றைய பார்வையாளர்கள் பொழுதுபோக்கை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. சமூகத்தில் நிகழும் மாற்றங்களை பிரதிபலிக்கும், உணர்வுகளோடு பேசும் கதைகளையும் அவர்கள் விரும்புகிறார்கள். ‘நூறு சாமி’ அந்த வகையில் மிகவும் முக்கியமான திரைப்படம். ‘பரிமளா & கோ’ பெற்ற வரவேற்பு, குடும்பங்கள் நல்ல கதைகளை எப்போதும் ஆதரிப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்தது. அந்த வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு வலுவான படைப்பாக ‘நூறு சாமி’ இணைகிறது. தென்னிந்திய மொழி பார்வையாளர்கள் அனைவரிடமும் இந்த திரைப்படத்தை கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
குடும்ப உறவுகள், பெண்களின் மனஉலகம், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் மனிதநேயத்தின் அருமையை ஒரே கதையில் சொல்லும் ‘நூறு சாமி’, இந்த ஆகஸ்ட் மாதம் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகி, குடும்ப பார்வையாளர்களின் மனதை தொட தயாராக உள்ளது.

ZEE5 Announces Vijay Antony’s ‘Nooru Saami’ as Its Next Family Drama, Set for August OTT Premiere
Chennai, July 24, 2026:
Marking actor Vijay Antony’s birthday, ZEE5 Tamil has officially announced Nooru Saami as its next major OTT release. The emotionally driven family drama is set to premiere exclusively on ZEE5 this August in Tamil, Telugu, Kannada, and Malayalam, with the official streaming date to be announced soon.
The announcement comes on the heels of the strong digital success of Parimala & Co., which emerged as a favourite among family audiences on ZEE5. Following the overwhelming response to the Jayaram and Urvashi starrer, the platform is now bringing another story rooted in family values, this time with a deeply emotional and socially relevant narrative.
Inspired by real-life incidents, Nooru Saami revolves around the journey of a widowed mother who dedicates years of her life to raising her son and supporting her family. In her mid-forties, she decides to embrace a second chance at life by considering remarriage, only to face resistance from relatives, her village community, and a society that believes a mother’s life should revolve solely around her family.
At the heart of the film is a moving mother-son relationship that challenges conventional storytelling. While many films celebrate a mother’s sacrifices, Nooru Saami takes a refreshing approach by portraying a son who not only understands his mother’s struggles but also stands firmly by her decision to seek happiness despite societal criticism. This emotional dynamic forms the soul of the film and offers a progressive perspective on family relationships.
Beyond the story of a single mother, the film explores themes of companionship, marriage, motherhood, sacrifice, and the expectations society places on women. Its relatable narrative is expected to resonate with audiences across generations, especially women and family viewers.
Although the film had a modest start during its theatrical run, it gained strong momentum through positive word of mouth. The emotional storytelling and heartfelt performances earned widespread appreciation, helping the film enjoy a successful run in cinemas.
Speaking about the announcement, Lloyd C. Xavier, Senior Vice President – South Marketing and Business Head – Tamil & Malayalam at ZEE5, said:
“Today’s audiences seek more than entertainment—they want stories that reflect changing social realities and leave a lasting emotional impact. Nooru Saami is one such film that blends a deeply rooted regional story with progressive ideas in a relatable and heartfelt manner. The phenomenal response to Parimala & Co. reaffirmed the audience’s love for authentic family stories, and Nooru Saami continues that journey. We are delighted to bring this touching film to family audiences across Tamil, Telugu, Kannada, and Malayalam, further strengthening ZEE5’s commitment to delivering meaningful entertainment across languages.”
Following the laughter and warmth of Parimala & Co., ZEE5 now invites viewers to experience a heartfelt story celebrating love, resilience, and the courage to embrace new beginnings.
Nooru Saami will stream exclusively on ZEE5 this August in Tamil, Telugu, Kannada, and Malayalam.
