Friday, November 6
Shadow

துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, அவரது புதிய திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா (AOT)’ படக்குழு ரசிகர்களுக்கு இனிய பரிசாக படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த மெலோடி பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ‘மிட்டாய் மழை’, கதையின் உணர்வுப்பூர்வமான மையக்கருவை அழகாக எடுத்துரைக்கும் மனதை வருடும் மெலோடி. கதாநாயகியின் மனநிலையிலிருந்து சொல்லப்படும் இந்தப் பாடல், உயரங்களை எட்ட வேண்டும் என்ற அவளது கனவையும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவளுக்கு உறுதுணையாக நிற்கும் நாயகனின் அமைதியான ஊக்கத்தையும் கவிதை நயத்துடன் வெளிப்படுத்துகிறது.

இது வெறும் காதல் பாடலாக இல்லாமல், அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் ஒருவரின் கனவை மற்றொருவர் தன்னலமின்றி தாங்கிச் செல்லும் உறவின் அழகை பேசும் இசைப் படைப்பாக உருவாகியுள்ளது. காதலின் வழக்கமான வரையறைகளைத் தாண்டி, மனித உறவின் ஆழத்தையும் உணர்வுகளின் மென்மையையும் இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுதிய வரிகள் கவித்துவமான உவமைகளால் நிறைந்துள்ளன. பின்னணிப் பாடகி ரம்யா பெஹாரா தனது இனிமையான குரலால் பாடலின் உணர்வை மேலும் உயிர்ப்பித்துள்ளார். ஒவ்வொரு வரியும் கனவுகளை நம்பிக்கையுடன் துரத்திச் செல்லும் மன உறுதியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா (AOT)’ திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியாகியுள்ள ‘மிட்டாய் மழை’, திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதுடன், இசை ரசிகர்களின் பிளேலிஸ்டிலும் தனி இடத்தைப் பிடிக்கும் மெலோடியாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

‘Mittai Mazhai’ from AOT Released as a Special Birthday Treat for Dulquer Salmaan Fans

Marking the birthday of actor Dulquer Salmaan, the makers of Aakasamlo Oka Thara (AOT) have unveiled the film’s first single, “Mittai Mazhai,” as a special gift for fans. The soulful melody has already begun winning hearts, creating excitement around the much-awaited film.

Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is an emotionally rich melody that beautifully captures the heart of the story. Narrated from the heroine’s perspective, the song reflects her dream of reaching for the stars and the quiet, unwavering encouragement of the man who inspires her to move forward. More than a conventional love song, it celebrates a unique emotional bond built on trust, hope, and selfless support.

The song features evocative lyrics by Balaji Venugopal, while singer Ramya Behara brings warmth and depth to the composition with her heartfelt rendition. The poetic verses are woven with metaphors that symbolize perseverance, optimism, and the silent strength that empowers every dream.

Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan in lead roles, Aakasamlo Oka Thara (AOT) is directed by Pavan Sadineni. The film is produced by Sandeep Gunnam and Ramya Gunnam under the banner of Lightbox Media, and is presented by Swapna Cinema in association with Geetha Arts.

Released on Dulquer Salmaan’s birthday, Mittai Mazhai has further heightened anticipation for AOT, offering audiences a touching glimpse into the film’s emotional world while raising expectations for its music and storytelling.