Tuesday, August 4
Shadow

இயக்குநராக முதல் அடியை பதித்த வி ஜே சித்து… ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

இயக்குநராக முதல் அடியை பதித்த வி ஜே சித்து… ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

 

டிஜிட்டல் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய வி ஜே சித்து, நடிகராக மட்டுமல்லாமல் தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த படம், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, நட்பு, நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் சுய அடையாளத் தேடலை மையமாகக் கொண்ட முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தில் வி ஜே சித்துவுடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பி. தினேஷ் கிருஷ்ணன் கவனித்துள்ள நிலையில், சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும், ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் தற்போது பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநராக வி ஜே சித்து எடுக்கும் முதல் முயற்சி என்பதாலும், இளைஞர்களை மையமாகக் கொண்ட கதைக்களம் என்பதாலும், ‘டயங்கரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VJ Siddhu’s Directorial Debut ‘Dayangaram’ Wraps Shooting; Post-Production Begins in Full Swing

Digital content creator and actor VJ Siddhu has taken a major step in his career by making his directorial debut with Dayangaram. The upcoming entertainer has now successfully completed its principal photography.

Produced by renowned producer Dr. Ishari K. Ganesh under the banner of Vels Film International, Dayangaram is a youthful entertainer that blends comedy, emotions, and contemporary themes while exploring friendship, self-discovery, and the aspirations of today’s generation.

Apart from directing the film, VJ Siddhu also plays the lead role. The ensemble cast includes Natty Natraj, Kaali Venkat, Ilavarasu, Nithin Sathya, Harshath Khan, Adithya Kathir, and several others in pivotal roles.

The film features cinematography by P. Dinesh Krishnan, music composed by Siddhu Kumar, editing by Pradeep E. Raghav, and costume design by A. Keerthi Vasan.

With filming now complete, the makers have shifted their focus to post-production, which is progressing at a brisk pace. The production team has confirmed that official announcements regarding the teaser, music launch, and theatrical release date will be unveiled in the coming weeks.

As VJ Siddhu’s first venture as a director and a film centered on the energy and aspirations of today’s youth, Dayangaram has already generated considerable curiosity among audiences, making it one of the most anticipated upcoming Tamil entertainers.