Saturday, August 8
Shadow

Tag: Kaali Venkat

கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா

கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா

Shooting Spot News & Gallerys
கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா! கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மாணவர்கள் முன்னிலையில் திருவிழா போல் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், நினைவுகள், நண்பர்கள், ரசிகர்களின் சமூகப் பொறுப்பு என பல்வேறு விஷயங்களை சூர்யா தனது உரையில் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில...
இயக்குநராக முதல் அடியை பதித்த வி ஜே சித்து… ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

இயக்குநராக முதல் அடியை பதித்த வி ஜே சித்து… ‘டயங்கரம்’ படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Latest News, Top Highlights
இயக்குநராக முதல் அடியை பதித்த வி ஜே சித்து... 'டயங்கரம்' படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!   டிஜிட்டல் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய வி ஜே சித்து, நடிகராக மட்டுமல்லாமல் தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'டயங்கரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த படம், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, நட்பு, நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் சுய அடையாளத் தேடலை மையமாகக் கொண்ட முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் வி ஜே சித்துவுடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்...
கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

கதையே ஹீரோ… கதாநாயகி அல்ல!” – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு

Latest News, Top Highlights
"கதையே ஹீரோ... கதாநாயகி அல்ல!" – 300வது பட விழாவில் யோகி பாபுவின் மனம் திறந்த உரை; கமலுடன் நடிக்கும் ஆசையையும் பகிர்வு சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தனது 300வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படப் பயணம், போராட்டங்கள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு, கதையின் முக்கியத்துவம், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். வருகிற ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி எஸ். மற்றும் தங்கப்பாண்டி. டி தயாரித்துள்ள இப்படத்திற்கு...
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு… ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
300-வது படத்தில் புதிய பரிமாணம் காட்டும் யோகி பாபு... ஜூலை 17-ல் வரும் “அர்ஜுனன் பேர் பத்து” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!   தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபு, தனது 300-வது திரைப்படமாக “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Dhev Cinemas Pvt Ltd நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்த திரைப்படம், ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அவரது 300-வது திரைப்படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன...
‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

‘கழுகு 2’ – திரைவிமர்சனம் (நலினம்) Rank 3/5

Review, Top Highlights
  கடந்த 2012-ம் வருடம் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம்‘கழுகு.’ ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியில் 'கழுகு 2.’ அந்த அடர்ந்த காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கிறது அதிகார வர்க்கம். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரனாக காட்டுக்குள் நுழைகிறார் கிருஷ்ணா. அப்படியே அங்கு மரம் வெட்டும் தொழிலாளிகளில் ஒருவரான பிந்து மாதவியின் மனதிலும் நுழைகிறார். காதலித்தவளைக் கைப்பிடித்து சொகுசாக வாழவைக்க எம்.எல்.ஏ. வீட்டில் திருடப்போகிறார். அந்த முயற்சியில் ஜெயித்தாரா இல்லையா என்பதே 'கழுகு 2' தந்திருக்கும் விறுவிறு திரைக்கதையோட்டம்... காமெடி, ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார் கிருஷ்ணா. நடிப்பில் நல்ல முதிர்ச்சி. பிந்து மாதவி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்...
ஆதி – நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ‘  ‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’  சான்றிதழ்

ஆதி – நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ‘ ‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

Latest News
ஆதி - நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படத்திற்கு, 'U' சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு. 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த 'மரகத நாணயம்' திரைப்படத்தில் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை போன்ற சிறப்பம்சங்களின் கலவையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. "U சான்றிதழை பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் 'மரகத நாணயம்' படத்திற்கு தணிக்கை குழுவினர் U சான்றிதழை வழங்கி இருப்பது, எங்கள் 'ஆக்ஸஸ் பிலிம...