Monday, August 24
Shadow

ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

ஜி.வி.பிரகாஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’வின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.

‘நிஞ்ஜா’ படத்தின் சிறப்பம்சமாக, இசையமைப்பாளர்களாக ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் இத்தகைய கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தஞ்சாவூரில் தொடங்கியுள்ள முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற உள்ளது. படத்தின் கதை மற்றும் களத்திற்கு ஏற்ற வகையில் தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

‘நிஞ்ஜா’ படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும், பிரியா ரவி ஆடை வடிவமைப்பாளராகவும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளின் இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தையும் தயாரித்து வருகிறார். அதேபோல், பா. இரஞ்சித்–ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தையும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கதாநாயகனாக ஜி.வி. பிரகாஷ் குமார், இசையில் சீன் ரோல்டன், இயக்கத்தில் அறிமுக இயக்குநர் முருகு என புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள ‘நிஞ்ஜா’, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Ninja’ Begins Filming in Thanjavur; GV Prakash Kumar and Sean Roldan Join Forces for a New Romantic Comedy

The shooting of ‘Ninja’, an upcoming romantic comedy family entertainer featuring GV Prakash Kumar as the lead and music by Sean Roldan, began today (August 24) with a traditional pooja ceremony in Thanjavur. The film is written and directed by debutant filmmaker Murugu.

One of the major highlights of ‘Ninja’ is the collaboration between acclaimed music composers GV Prakash Kumar and Sean Roldan. While GV Prakash Kumar was initially brought on board as the composer, he has now taken on the role of the protagonist as well, adding further curiosity around the project.

Prarthana, who has earned appreciation for her performances in films including ‘Thalaivar Thambi Thalaimaiyil’, ‘Love Today’ and ‘Parking’, plays the female lead. Veteran and popular actors including Jensen Dhivakar, Radha Ravi, Deepa Ramanujam, Devadarshini and Kalyani Natarajan are also part of the cast in important roles.

Written and directed by Murugu, ‘Ninja’ is jointly produced by S. Sai Devanand and K.S. Sinish under the banners of Soldiers Factory and Learn & Teach Production.

The first schedule of the film has commenced in Thanjavur and will continue for 20 days. The makers have brought together a fresh team of talents both in front of and behind the camera, with the film being planned as a blend of romance, humour and family emotions.

Harish Kannan is handling the cinematography, while Ganesh Siva is the editor. Gopi Anand serves as the art director, Priya Ravi is the costume designer and Dinesh Kasi choreographs the action sequences.

Producer K.S. Sinish, who previously backed the National Award-winning film ‘Parking’, is simultaneously producing ‘Super Hero’, starring Arjun Das and Sandy. Learn & Teach Production is also associated with ‘Vettuvam’, which brings together director Pa. Ranjith and actor Arya.

With GV Prakash Kumar leading the cast, Sean Roldan composing the music and debutant Murugu at the helm, ‘Ninja’ brings together an interesting new combination of talents. The film is expected to be an engaging romantic comedy family entertainer, with further updates from the makers expected soon.