ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம்’ 2 கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஆதி – ஏ.ஆர்.கே. சரவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் நினைவில் இருந்து வருகிறது.
இந்நிலையில், முதல் பாகம் வெளியாகி சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணே ‘மரகத நாணயம் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல...









