Wednesday, October 28
Shadow

தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாகும் ‘எல்லம்மா’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாகும் ‘எல்லம்மா’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இசையமைப்பாளராகவும், பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், தற்போது கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘பலேகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு யெல்தண்டி, இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தை தில்ராஜு வழங்குகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ‘எல்லம்மா’ ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.

இசையமைப்பாளராகப் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத், கதாநாயகனாக எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவர்வார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. 2027 மார்ச் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

 

Devi Sri Prasad’s ‘Yellamma’ Set for Worldwide Theatrical Release on March 5, 2027

Music composer and singer Devi Sri Prasad is all set to take on the lead role in Yellamma, and the makers have officially announced the film’s worldwide theatrical release date. The film is scheduled to hit cinemas on March 5, 2027.

Directed by Venu Yeldandi, who earned recognition for his critically acclaimed film Balagam, Yellamma is currently progressing with its shooting at a brisk pace.

The film is presented by Dil Raju and produced by Shirish under the banner of Sri Venkateswara Creations. Devi Sri Prasad is also composing the music for the project.

Planned as a grand pan-Indian release, Yellamma will arrive in five languages: Telugu, Tamil, Hindi, Malayalam, and Kannada, allowing the film to reach audiences across the country.

Known for delivering several popular chartbusters as a music composer, Devi Sri Prasad’s transition into a leading role has raised curiosity among moviegoers. With its release date now confirmed, expectations are building around the film, and audiences will be looking forward to more updates from the makers in the coming months.

Yellamma is scheduled for a worldwide theatrical release on March 5, 2027.