
விஜய் சேதுபதியின் வரிகளில் உயிர்பெறும் ‘இருவர்’! நிவாஸ் கே. பிரசன்னா இசையில் அதிதி ஷங்கர், சூரஜ் சந்தோஷ் குரல்களில் வெளியாகிறது புதிய இசைப் படைப்பு!
காதல், நட்பு, மனித உறவுகளின் உணர்வுகளை இசையால் சொல்ல வரும் ‘இருவர்’ – ‘ஜடா’ குமரனின் வித்தியாசமான முயற்சி!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் ஈர்த்த இயக்குநர் குமரன், தற்போது திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, இசையையும் காட்சிகளையும் மையமாகக் கொண்ட புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். ‘ஜடா’ படத்தின் மூலம் அறியப்பட்ட இவர் இயக்கியுள்ள புதிய இசைப் படைப்புதான் ‘இருவர்’.
ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படைப்புக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த முயற்சியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்திருப்பது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடல் வரிகளை எழுதியிருப்பதுதான். நடிகராக மட்டுமின்றி, தற்போது பாடலாசிரியராகவும் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ள விஜய் சேதுபதியின் வரிகள் இந்தப் பாடலுக்கு தனி கவனம் பெற்றுத் தந்துள்ளன.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், சூரஜ் சந்தோஷ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். குறிப்பாக, நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமான அதிதி ஷங்கர், தனது குரல் மூலம் இந்த இசைப் படைப்பில் பங்களித்திருப்பது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல், நட்பு, மனிதர்களுக்கு இடையிலான நெருக்கம் என அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு ‘இருவர்’ உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான திரைப்படக் கதை சொல்லும் முறையைத் தவிர்த்து, இசை, காட்சிகள் மற்றும் உணர்வுகளின் வழியாக ஒரு கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இதனை இயக்குநர் குமரன் உருவாக்கியுள்ளார்.
‘தெகிடி’, ‘சேதுபதி’, ‘ஓ மை கடவுளே’, ‘பைசன்’, ‘தாய்க்கிழவி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது இசைப் பயணத்தில் தனித்த அடையாளத்தைப் பெற்ற நிவாஸ் கே. பிரசன்னா, இந்தப் படைப்புக்கும் இசையமைத்துள்ளார். இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் ‘இருவர்’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த இசைப் படைப்பில் ஒளிப்பதிவை அர்ஜுன் ராஜா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை தீபக் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ஜெய் முருகன் பணியாற்றியுள்ளார். கூடுதல் கீபோர்டு, ரிதம் புரொடக்ஷன் மற்றும் கூடுதல் மாஸ்டரிங் பணிகளை ஹெவின் பூஸ்டர் மேற்கொண்டுள்ளார்.
நிஷாந்த் நடன இயக்குநராகவும், புவனா மற்றும் தீபிகா ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். நவநீத கிருஷ்ணன் விளம்பர வடிவமைப்பையும், முரளி புகைப்படப் பணிகளையும் கவனித்துள்ளனர். தயாரிப்பு மேலாண்மையை கோகுல் மேற்கொண்டுள்ளார். வண்ணச் சேர்க்கையை சண்முகபாண்டியன் கவனித்துள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை ரேகா மேற்கொள்கிறார்.
ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் சார்பில் வினோத் குமார், புஷ்பகலா மற்றும் குமரன் இணைந்து தயாரித்துள்ள ‘இருவர்’ இசைப் படைப்பின் ஆடியோ மற்றும் லிரிக்கல் வீடியோ இன்று (நவம்பர் 4) சரிகமா ஒரிஜினல்ஸ் (Saregama Originals) யூடியூப் தளத்தில் வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் எழுத்து, நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, அதிதி ஷங்கர் மற்றும் சூரஜ் சந்தோஷின் குரல்கள் எனப் பல திறமைகள் ஒன்றிணைந்துள்ள ‘இருவர்’, இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘Iruvar’: Vijay Sethupathi Turns Lyricist for Director Kumaran’s New Musical Venture; Nivas K. Prasanna, Aditi Shankar and Sooraj Santhosh Join Hands!
A musical celebration of love, friendship and human emotions, ‘Iruvar’ brings together an exciting combination of talent, with its audio and lyrical video releasing under Saregama Originals on November 4, 2026.
Director Kumaran, who made his mark with the film Jada, is back with an interesting new venture titled Iruvar. Moving away from conventional filmmaking, this musical creation aims to tell a story through music, visuals and emotions.
Produced by Stonebrook Films, Iruvar brings together several talented names from the Tamil film and music industries. One of the biggest highlights of the project is that actor Vijay Sethupathi has penned the lyrics for the song, adding a special attraction to the musical venture.
Popularly known as Makkal Selvan, Vijay Sethupathi has earned a special place among audiences through his distinctive performances and choice of characters. With Iruvar, he explores another creative avenue by stepping into the role of a lyricist. His contribution has already created curiosity among music lovers.
The music for Iruvar has been composed by Nivas K. Prasanna, who is known for his work in films such as Thegidi, Sethupathi, Oh My Kadavule, Bison and Thaai Kizhavi. The song features the voices of Sooraj Santhosh and actress Aditi Shankar, who have come together to bring the emotions of the composition to life.
For Aditi Shankar, the project offers another opportunity to showcase her artistic talents, this time through her singing. The combination of Nivas K. Prasanna’s music, Vijay Sethupathi’s lyrics and the vocals of Aditi Shankar and Sooraj Santhosh makes Iruvar an interesting musical collaboration.
Director Kumaran has approached the project differently from a regular feature film. Rather than relying on conventional storytelling, Iruvar attempts to communicate emotions surrounding love, friendship and human relationships through its music and visual presentation.
The technical team includes Arjun Raja as the cinematographer and Deepak as the editor. Jai Murugan has handled the art direction, while Hevin Booster has taken care of additional keyboard programming, rhythm production and additional mastering.
Nishanth has choreographed the dance sequences, while Bhuvana and Deepika have worked on costume design. Navaneetha Krishnan has handled the promotional designs, and Murali is in charge of photography. Gokul serves as the production manager, with Naveen, Praveen and Gopinath Thiraviyam working as production coordinators. Shanmugapandian has handled the colour grading, while Rekha is overseeing the public relations.
Produced by Vinod Kumar, Pushpakala and Kumaran under the banner of Stonebrook Films, Iruvar is set to reach audiences through its audio and lyrical video release under the Saregama Originals label on November 4, 2026.
With Vijay Sethupathi’s lyrics, Nivas K. Prasanna’s musical composition and the voices of Aditi Shankar and Sooraj Santhosh, Iruvar promises to be an interesting addition to the Tamil independent music space. All eyes are now on how this unique musical collaboration connects with listeners.
