Friday, November 13
Shadow

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

அப்பா – மகள் பாசத்தை ஆக்‌ஷன் கலந்த உணர்வுபூர்வமான கதையாகச் சொல்லும் ‘அப்பா குட்டி’! – நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது; விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி!

சென்னை:

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்கள், கதையின் சிறப்பம்சங்கள் மற்றும் தங்களது பணியின்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

வழக்கமாகக் குற்றப் பின்னணியிலான திரில்லர் கதைகளை இயக்கி வந்த மு. மாறன், இந்தப் படத்தின் மூலம் முற்றிலும் மாறுபட்ட களத்தில் பயணித்திருக்கிறார். தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசம், அன்பு, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், குடும்ப உணர்வுகளுடன் விறுவிறுப்பான திருப்பங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்த படைப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் மு. மாறன்!

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மு. மாறன், “இது என்னுடைய நான்காவது திரைப்படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தவை. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை ஏன் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வு செய்தேன்.

இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் கூறியபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. பின்னர் விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னபோதே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதையைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.

ஒரே படப்பிடிப்பு அட்டவணையில் சுமார் 60 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. அனைவரும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.

‘அப்பா குட்டி’ எனக்கு மிகவும் பிடித்த கதை – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி பேசுகையில், “இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது முதல் பாதியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதையைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாகப் படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன.

‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்தப் பாடல்களை நானே வைத்துக்கொண்டேன். ஆனால் பின்னர் அந்தப் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடலைக் கேட்டபோதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்தில் திட்டமிட்டு, படத்தைச் சிறப்பாக முடித்திருக்கிறார். ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களை அழகாகப் பேசி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே அனுபவம் வாய்ந்த நடிகையைப் போல நடித்திருக்கிறார்.

படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டோம் – தயாரிப்பாளர் தனஞ்செயன்!

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். விஜய் ஆண்டனி சார் படத்தின் எடிட்டிங் முடிந்ததும் என்னை அழைத்து, படத்தைப் பார்த்துக் கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார். அந்த அளவுக்கு இந்தப் படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது.

‘தெய்வத்திருமகள்’ படத்தில் ஒரு தந்தையாக விக்ரம் சார் அற்புதமாக நடித்திருந்தார். அதேபோல், ஒரு தந்தை தனது மகளுக்காக எந்த எல்லை வரை செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பேபி லிதன்யாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அருமையாக இருக்கின்றன. தமிழ் தெரியாத வெளிநாட்டு ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குப் படத்தைத் திரையிட்டபோதும் அவர்கள் கதையுடன் ஒன்றிப்போய் உணர்ச்சிவசப்பட்டனர். இடைவேளையில்கூட படத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பார்க்க விரும்பினர். படத்தைப் பார்த்து பாராட்டியதுடன், உரிமையைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர். பின்னர் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது.

ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தைத் தானே வெளியிட விரும்புவதாகக் கூறி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார். படம் வெளியாகும் முன்பே கிடைத்துள்ள இந்த வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டும்” என்றார்.

அப்பா பாடல் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது!

பாடலாசிரியர் ஏகாதசி பேசும்போது, “இயக்குநருடன் ஏற்கெனவே ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் அப்பாவையும் மகளையும் மையமாகக் கொண்டு இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, அப்பாவைப் பற்றிய பாடல் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. சிறுவயதிலேயே அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் அனுபவிக்க முடியாதவன் நான். அந்தத் தனிப்பட்ட வலியும் இந்தப் பாடலை எழுதும்போது எனக்குள் இருந்தது. ஒரு எழுத்தாளராக கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பாடல் வரிகளாக வெளிப்படுத்த முடிந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநருக்கு நன்றி” என்றார்.

பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில், “விஜய் ஆண்டனி சார்தான் என்னை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்திலும் அழகான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எப்போதும் எனக்கு நெருக்கமானவை. எனது தந்தையைப் பிளஸ் டூ படிக்கும்போது விபத்தில் இழந்தேன். அந்த நினைவுகள் இன்றும் மனதில் இருக்கின்றன. இந்தப் படத்தின் டிரைலரிலேயே அப்பா – மகள் உறவின் ஆழத்தை உணர முடிகிறது” என்றார்.

ப்ரீத்தி அஸ்ராணி: அப்பாக்களின் தியாகத்தை இந்தப் படம் உணர்த்தும்!

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. கதையைக் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் இதில் இருக்கின்றன. அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் நமக்காகப் பல தியாகங்களைச் செய்கிறார்கள். அந்த உணர்வுகளை இந்தப் படம் அழகாகப் பேசும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களது அப்பாவுக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன். விஜய் ஆண்டனி சாருடன் பணியாற்றியது நல்ல அனுபவம். அவர் எளிமையாகப் பழகுவதுடன், சக நடிகர்களுக்கும் நடிப்பதற்கான முழுச் சுதந்திரம் அளித்தார். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். நவம்பர் 20-ம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.

படத்தின் மற்ற கலைஞர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள்!

நடிகை ஹரிப்ரியா, இது தனது முதல் திரைப்படம் என்றும், தனக்கு வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் மு. மாறனுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். நடிகை ஹரிதா, படத்தில் தந்தையின் அன்பு மற்றும் குழந்தைப் பருவ உணர்வுகள் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நடிகை லிஸ்ஸி ஆண்டனி, அப்பாவைப் பற்றிய பாடல் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகத் தெரிவித்தார். ஹரிப்ரியா விஸ்வநாதன், இயக்குநர் மு. மாறனுடன் இரண்டாவது முறையாகப் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்தப் படத்தில் தனக்குக் கிடைத்த கதாபாத்திரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்றும் கூறினார்.

நடிகர் மூணாறு ரமேஷ், இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாகியிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். நடிகர் ஜென்சன் திவாகர், படத்தின் திரைக்கதை தொடக்கத்திலிருந்தே தன்னை ஈர்த்ததாகவும், கிரைம் திரில்லராகத் தொடங்கி உணர்வுபூர்வமான அனுபவமாக மாறும் திரைக்கதை ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவத்தைத் தரும் என்றும் கூறினார்.

நடிகர் முருகானந்தம், இயக்குநர் மு. மாறனின் மனிதநேயத்தையும் விஜய் ஆண்டனியின் கடின உழைப்பையும் பாராட்டினார். விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் பிரவீன் லால்வானி ஆகியோர் படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இயக்குநர்கள் மந்திரமூர்த்தி, ஆனந்த் மற்றும் சசி ஆகியோரும் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக, இயக்குநர் சசி, விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் ஒரு தந்தையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் எனக் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக் குழுவின் புதிய முயற்சிகள்!

படத்தின் கலை இயக்குநர் ராஜா பேசுகையில், இரண்டு வெவ்வேறு காலகட்டங்களைக் காட்சிப்படுத்துவதற்காக வண்ணங்கள், காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றில் பல புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன், ஊட்டியின் இயற்கை அழகையும் கதைக்குத் தேவையான காட்சிகளையும் இணைத்து விஷுவல்களை உருவாக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பாடலாசிரியர்கள் ஏகாதசி, அருண் பாரதி ஆகியோரின் பாடல்களும் படத்தின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

நவம்பர் 20-ல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் ‘அப்பா குட்டி’!

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மு. மாறன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கெனவே வெளியான படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. ஃபைவ் ஸ்டார் செந்தில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

அப்பா – மகள் உறவின் ஆழத்தையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் சொல்ல வரும் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Vijay Antony’s ‘Appa Kutty’ Promises an Emotional Father-Daughter Story with Action; Worldwide Theatrical Release on November 20!

Chennai: The press meet of Appa Kutty, starring Vijay Antony and directed by M. Maran, was held in Chennai in the presence of the film’s cast, crew members, producers and distributors. The team shared interesting experiences from the making of the film and spoke about its emotional storyline, performances and unique elements.

Unlike his previous three films, which belonged to the crime thriller genre, director M. Maran has explored a completely different subject with Appa Kutty. Centred on the beautiful relationship between a father and his daughter, the film blends family emotions with engaging twists, action sequences and commercial entertainment.

Vijay Antony: ‘I Immediately Agreed to Be Part of This Film’

Speaking at the event, Vijay Antony said, “Working on Appa Kutty has been a wonderful experience. When I heard the story, I liked the first half immediately. After listening to the second half, I agreed to act in the film without any hesitation. The climax is particularly special, and the songs have also come out beautifully.

“When I heard the song about the father in this film, I felt that the album would receive a good response from audiences. Director M. Maran is extremely talented. He planned everything well and completed the film efficiently within a short period.

“Preethi Asrani has delivered a wonderful performance. Although Tamil is not her mother tongue, the way she has delivered her dialogues deserves appreciation. Baby Lithanya’s performance is also remarkable. She has acted with the professionalism of an experienced performer despite her young age.

“I thank all the actors, technicians, distributors and everyone who worked on this film. I am also grateful to the fans who have continuously supported me. I am happy that the announcement of Pichaikkaran 3 was made at this event, and I hope that film will also reach audiences soon. I request everyone to watch and support Appa Kutty in theatres.”

Director M. Maran: ‘This Is a Completely Different Attempt for Me’

Director M. Maran said, “Appa Kutty is my fourth film. My previous three films were crime thrillers. Many people asked why I continued making films in the same genre, which encouraged me to explore a completely different storyline this time.

“When I narrated this story to several producers, they liked it. Later, I met Vijay Antony sir and narrated the first half. He immediately agreed to be part of the film. After hearing the second half, he suggested that we begin the project without delay.

“This film is an example of how a good story always finds recognition. We completed the film in approximately 60 days in a single schedule. I sincerely thank everyone who made this project possible, including the producers, technicians, actors and the entire team. I request audiences to extend their support to the film.”

Producer Dhananjayan: ‘The Film Moved Us to Tears’

Producer Dhananjayan shared his emotional experience after watching the film.

“I watched Appa Kutty nearly four months ago. Vijay Antony sir usually invites me to watch his films after completing the editing and asks me to share my honest opinion. I watched this film along with my wife. When the film ended, tears rolled down my eyes, and my wife was also in tears. That is how deeply the film affected us.

“Just as Vikram delivered an extraordinary performance as a father in Deiva Thirumagal, Vijay Antony has portrayed how far a father can go for his daughter in this film. I am confident that audiences will celebrate his performance.

“Preethi Asrani has taken up a challenging role and performed it beautifully. Baby Lithanya’s acting, dialogue delivery and emotional scenes with Vijay Antony are also impressive.

“We screened the film for representatives of an international OTT platform who did not understand Tamil. Yet, they connected with the story emotionally and even requested that the screening continue without an interval. After watching the film, they appreciated it and initiated discussions to acquire its rights. Zee has also acquired the satellite rights.

“Distributor Five Star Senthil watched the film with his family and immediately expressed his interest in acquiring its theatrical distribution rights. The recognition the film has received even before its release is a great encouragement for us. I believe Vijay Antony, Preethi Asrani, Baby Lithanya and director M. Maran will receive tremendous appreciation for their work.”

Preethi Asrani: ‘The Film Will Make Audiences Appreciate Their Fathers’

Actress Preethi Asrani said, “Appa Kutty is a very special and personal film for me. I loved the story when I first heard it. There are several moments in the film that beautifully portray a daughter’s understanding of her father’s love and sacrifices.

“We often speak about a mother’s love, but fathers rarely express their emotions openly. They make countless sacrifices and efforts for their children, which we sometimes fail to recognise. I believe that after watching this film, many people will call their fathers and speak to them.

“My character is young in age but has mature thoughts. When I asked the director whether I would be able to portray the role convincingly, he gave me the confidence to take it up.

“Working with Vijay Antony sir was a wonderful experience. Despite handling several responsibilities as an actor, music composer, editor and producer, he remained humble and gave his co-actors complete freedom. The entire team worked together like a family. I request everyone to watch Appa Kutty in theatres on November 20 and extend their support.”

Lyricist Ekadasi Shares the Personal Emotions Behind the Father Song

Lyricist Ekadasi revealed that his personal experiences influenced the emotional song about a father.

“I previously worked with the director on Aval Peyar Tamilarasi. After a long gap, it is a pleasure to collaborate with the team again.

“I have written two emotional songs in this film, one focusing on a father and the other on his daughter. Particularly, the song about the father has touched many people. I received several calls and messages appreciating the lyrics.

“I have already written a popular song about a mother. I am happy to have written a song celebrating a father’s love as well. I lost the opportunity to experience my father’s affection and care during my childhood, and those personal emotions also found their way into the lyrics. I thank Vijay Antony sir and the director for giving me this opportunity.”

Lyricist Arun Bharathi also spoke about his emotional connection with the father-daughter relationship portrayed in the film. He recalled losing his father in an accident when he was studying in Class 12 and said that the memories continued to remain close to his heart.

Cast and Crew Share Their Experiences

Actress Haripriya expressed her gratitude to Vijay Antony and director M. Maran for giving her an opportunity in her debut film. She said that working with experienced artists and technicians had been a memorable experience.

Actress Haritha appreciated Vijay Antony’s humble nature and said that the film beautifully explores a father’s love and childhood emotions.

Actress Lizzie Antony said that she was a great admirer of Vijay Antony’s music and choice of scripts. She particularly appreciated the emotional song dedicated to fathers.

Actress Haripriya Viswanathan expressed her happiness about collaborating with director M. Maran for the second time and described her character as challenging, with several different dimensions.

Actor Munnar Ramesh expressed confidence that the film would connect with audiences across age groups. Actor Jensen Dhivakar said that the screenplay attracted him within the first few pages and praised the way the story transitions from a crime thriller setup into an emotional experience.

Actor Muruganandam appreciated the director’s approach and Vijay Antony’s dedication. Directors Manthira Moorthy, Anand and Sasi also extended their wishes to the entire team.

Distributor Five Star Senthil, distributor Praveen Lalwani and other industry personalities expressed confidence in the film’s content and its potential to connect with family audiences.

Technical Team Highlights the Film’s Visual Appeal

Art director Raja revealed that several innovative approaches were adopted in designing the film’s visuals, particularly to distinguish between two different timelines through colours, sets and visual elements.

Cinematographer Rajeev Rajendran spoke about the experience of capturing the scenic beauty of Ooty and creating visuals that complement the emotional tone of the story.

The film’s songs, penned by Ekadasi and Arun Bharathi, are expected to play an important role in strengthening its emotional appeal.

About the Film

Appa Kutty is an action-oriented family entertainer centred on the unconditional love, affection and emotional bond between a father and his daughter. Along with its family sentiments, the film also features engaging action sequences and commercial elements.

Written and directed by M. Maran, the film stars Vijay Antony and Preethi Asrani in the lead roles, with Baby Lithanya playing an important character. Bhagavathi Perumal (Bucks), Haripriya Isai, Aruvi Madhan, Chitra Lakshmanan and Sreeja Ravi are also part of the cast.

Vijay Antony has composed the music and handled the editing, while Rajeev Rajendran is the cinematographer. Five Star Senthil has acquired the theatrical distribution rights.

Following the attention generated by its posters, songs and trailer, Appa Kutty is gearing up for a worldwide theatrical release on November 20, 2026.