Wednesday, June 24
Shadow

ஒரு கிடாயின் கருணை மனு – திரைவிமர்சனம் (செமவிருந்து) Rank 3.5/5

தொடர்ந்து சிறந்த கதைகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் அதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் நல்ல விஷயம் இல்லை என்றால் ரசிகர்கள் திரையரங்கம் பக்கம் வருவதில்லை என்று தற்போது சினிமா நிருபித்துள்ளது. என்று தான் சொல்லணும் அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் படம் ஒரு கிடாயின் கருணை மனு மிக சிறந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது எந்த வித கமர்சியல் விஷயங்கள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி களம் இறங்கிய படம் என்று தான் சொல்லணும்.

பல கோடிகளில் பணம் கொட்டி, டாப் ஸ்டார்கள், நவீனமயமான உயர் தொழில்நுட்பங்கள், வித வித லொகேஷன்கள் என பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படங்கள் பல குப்புற விழுந்து விடுகின்றன. தோல்விக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால், ‘‘ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சரிவிகிதத்தில் கலக்கும்போது தண்ணீர் கிடைத்துத்தான் ஆகவேண்டும். அதேபோல ஈக்வேஷன்களை கரெக்டாக அப்ளை பண்ணுகிற படங்கள் ஜெயித்தே ஆகணும் ‘ என்ற ஃபார்முலாவை கரெக்டாக புரிந்து உருவாகும் படம் ஜெயித்தே ஆகும் சில படங்கள்தான் ஃப்ரூப் பண்ணுகிறது, அந்த வரிசையில் ரசிகர்கள் மனதில் ப்பச்சக்கென்று ஒட்டிக் கொண்டதுதான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

ஒரு கிடாவின் பார்வையில் இருந்து தொடங்குகிறது கதை. கொஞ்சம் லேட்டாக அதாவது 35 வயதில் திருமணமாகும் பேரன் விதார்த்துக்காக, குலதெய்வம் கோயிலுக்கு அந்த கிடாவை நேர்ந்து விட்டிருக்கிறாள், பாட்டி. அந்த கிடா-வை பலியிட்டு விருந்து வைப்பதற்காக ஊர்க்காரர் மற்றும் உறவினர்களை பலரயும் லாரியில் அழைத்துச் செல்கிறார்கள். குல தெய்வ கோயிலுக்கு போகும் வழியில்ல் ஆர்வக்கோளாறில் டிரைவரிடம் கேட்டு, தானே லாரி ஓட்டுகிறார். அந்த நேரத்தில் மொபட்டில் வந்த ஒருவர் மீது லாரி மோதி அவர் இறந்துவிடுகிறார். இதனால், குலசாமி கோயில் பயணம் தடைபடுகிறது. வண்டி ஓட்டியது புதுமாப்பிள்ளை விதார்த் என்பது தெரிந்ததும், அவரைக் காப்பாற்ற பல்வேறு கோணங்களில் உறவினர்கள் யோசிக்கிறார்கள். செத்தவரைப் புதைத்துவிட்டு, பயணத்தைத் தொடர நினைக்கிறார்கள். ஆனால், அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. என்பதை படு யதார்த்தமாக சொல்கிறது படம்.

டைரக்டர் சுரேஷ் சங்கையா படு நேர்த்தியாக யோசித்து தயார் செய்த திரைக்கதைதான் படத்தின் முதுகெலும்பு என்றாலும், அதைவிட வலுவான வசனங்களும், அதை நடிகர்கள் பேசும் விதமும் பல இடங்களில் கைத்தட்டலை அள்ளுகிறது. குறிப்பாக் சொல்ல முடியா விட்டாலும் புதுமாப்பிள்ளை விதார்த், அவரது இளம் மனைவி ரவீணா, அரும்பாடு படும் ஹலோ கந்தசாமி, ரவீணாவின் தந்தை ஜெயராஜ், சமையல் மாஸ்டர் சித்தன் மோகன், விதார்த்தின் நண்பன் ெகாண்டி ஆறுமுகம், லாரி உரிமையாளர் செல்வமுருகன், டிரைவர் வீரசமர், வக்கீல் ஜார்ஜ் என ஒவ்வொரும் அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்து, சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். வட்டார வழக்கு உச்சரிப்பு, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள், டைமிங் டபுள்மீனிங் டயலாக்-கை லேடீஸ் கூட கேஷூவலாக அவிழ்த்தி விடுவது என்று படம் முழுவதும் பந்தி வைத்து பரிமறி கொண்டே இருக்கிறார்கள்ள். இரண்டு காட்சிகளில் வரும் டாக்டர் முதல், படம் முழுக்க தலைகாட்டும் ஏழரை வரை, எல்லோருமே சபாஷ் வாங்கிக் கொண்டு போகிறார்கள். அதிலும் வக்கீல் ஜார்ஜ் ஒரு உண்மையை தன் தொழில் பொருட்டு மறைத்து நாலு வருஷ போக்கு வித்திட்டத்தை அருமையாக யதார்த்தமாக காட்சிப்ப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் முக்கிய பலம் என்றால் அது திரைகதை என்று தான் சொல்லணும் யாருக்கும் தெரியாத நட்சத்திரங்கள் வைத்து ஒரு பொட்டால் காட்டில் மிக அழகாக படத்தை நகர்த்தி இருப்பது இயக்குனரை சபாஷ் போடவைக்கிறது சில சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் படம் ரசிக்க வைக்கிறது அதோடு சிந்திக்கவைக்கிறது

மொத்தத்தில் கடாவை ருசிக்காமல் ருசிக்க வைத்தபடம் பேரில் அசைவம் இருந்தாலும் சுத்த சைவம் Rank 3.5/5

Leave a Reply