Wednesday, October 28
Shadow

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கமலின் `விஸ்வரூபம்-2′

கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் `விஸ்வரூபம்-2′ படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’.

இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகள் சில வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`விஸ்வரூபம்-2′ படத்தின் டிரைலர் மற்றும் ஜிப்ரான் இசையில் பாடல்கள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

`விஸ்வரூபம்-2′ குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநாளில் தான் ஜெயம் ரவியின் `டிக் டிக் டிக்’ படமும், அனுஷ்காவின் `பாக்மதி’யும் ரிலீசாக இருக்கிறது.

Leave a Reply