
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் கடந்த சில வருடங்களாக இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இணைய தள ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம். பொது இடங்களுக்கு வந்தாலும் அவரை நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். சன்னியை போலவே ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகள் பலர் மேற்கத்திய நாடுகளில் உள்ளனர். அதைவொரு தொழிலாகவே அவர்கள் செய்கின்றனர். இவர்களில் பலர் திருமணம் ஆகி கணவருடன் வசிப்பவர்கள். கனடாவை சேர்ந்தவர் ஆகஸ்ட் ஏம்ஸ். 23 வயதே ஆன இவரது ஒரிஜினல் பெயர் மெர்சிடெஸ் கிரபோவ்ஸ்கி. இவரது கணவர் கெவின் மூர்.
ஆபாச பட நடிகை, மாடல் அழகி என பலமுகங்கள் கொண்ட அமெஸ் கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் கடந்த 5ம் தேதி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முதல்நாள்வரை கூட அவர் இணைய தள பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வந்திருக்கிறார். அவரது திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆணுக்கு ஆண் உறவு கொள்ளும் ஹோமோசெக்ஸ் பிரிவினர் மீது அமெஸுக்கு இருந்த பய உணர்வே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற ஆண்களுடன் அவர் உறவு கொள்ள தயங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உண்மையான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
