
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் வேலைக்காரன்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 1 வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடங்கள் வெளியாகியது அவை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

வேலைக்காரன் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.இன்னும் சில தினங்களில் வேலைக்காரன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மிக பெரிய சமூக பிரச்சனையை மையமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
