
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இந்த வாரத்தில் அரையாண்டு பரீட்சை முடிவதால் வேலைக்காரன் படத்தை குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையில் ரிலீஸ் செய்கிறார்கள். வேலைக்காரன் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
