
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை இருந்தும் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அஜித்தின் முக்கிய வட்டாரம் கூறுகிறது பொதுவாக அஜித் ஒரு படம் முடிந்தவுடன் தான் அடுத்த படம் அறிவிப்பு வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்று கருத்துடன் அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனர் மட்டும் இல்லமால் வித்தியாசமான கதை களம் சொல்லும் இயக்குனருடன் ஜோடி சேருகிறார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர் வினோத். சமீபத்தில் விஜய், அஜித் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் இருவருமே வினோத்துடன் பணிபுரிய அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருவரிடமும் வினோத் கதையைப் பற்றி ஆலோசனை செய்துள்ளார். அவர்களில் அஜித் நடிக்கும் படத்தை வினோத் அடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய், அடுத்த சில படங்கள் குறித்து ஏற்கெனவே முடிவு செய்துள்ளதால் அவருடன் வினோத் இயக்க உள்ள படம் தள்ளிப் போகலாம்.
‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திற்கும் சம்மதிக்காமல் இருக்கும் அஜித் வினோத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவரும் கதை விவாதத்தில் இறங்கியுள்ளதாகத் தகவல். ‘விஸ்வாசம்’ படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாக உள்ளது.
அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் , வினோத் இணையும் புதிய படம் ஆரம்பமாகலாம்.
