Tuesday, April 21
Shadow

காலா படத்தில் அஜித் ஸ்பெஷல்! டீசர் ரகசியம் – ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம் தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாளைக்கு வர இருக்கும் டீசர் பற்றிய ஒரு சுவாரிஸ்யமான செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் மும்பை கதையை கொண்டு காலா படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியரின் இறுதி சடங்கு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார்.

தற்போது டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதில் ஸ்பெஷல் விசயம் என்றால் பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இப்படத்திலும் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் யோகிபாபுவுடன் காலாவில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒரு சிறந்த மனிதன், வெறித்தனமான திறமை. காலா டீசருக்காக பங்களிப்பை கொடுத்ததற்கு நன்றி யோகி பிரதர்.

பிரிந்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்தால் ஏதோ வெயிட்டாக பாடியிருப்பார் என எதிர்பார்க்கலாம். யோகி பி விவேகம் படத்தில் பாடி அசத்தினார்.