
சூப்பர் ஸ்டார் என்றாலே அதிரடி என்று நாம் அறிந்த விஷயம் ஒரு பக்க சினிமாவில் அதிரடி மறுபக்கம் அரசியலில் அதிரடி ஆம் ஒரு பக்கம் காலா ரசிகர்களை உற்சாகத்தில் அழுத்தியது அடுத்த பக்கம் கட்சியின் நிர்வாகிகள் அறிவிப்பு என்று ஒரே சமயத்தில் அறிவிப்புகள் வெளியானது நேற்று விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அதன் சுற்றியுள்ள நகரின் நிர்வாக அறிவிப்பும் வெளியானது. அதோடு நிர்வாகிகள் தேர்வை, அடுத்து நேரடியாகவே நடத்த, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார்.
விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள ரஜினி, அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, அதில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளார். மாவட்ட வாரியாக, நிர்வாகிகள் தேர்வும் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக, 10 மாவட்டங்களுக்கு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கமலின் அரசியல் பிரவேசம் மற்றும் சுற்றுப்பயணம் சுறுசு றுப்பு அடைந்துள்ள நிலையில், ரஜினியும், மாவட்ட வாரியாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அத்துடன், 10 மாவட்டங்கள் போக, மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை, அவரே நேரடியாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். ரஜினியின் பயண திட்டம், விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.
