Tuesday, April 21
Shadow

விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கும் டி.டி

சின்னத்திரை ஸ்டார் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி அதாவது டி.டி என்பது நாம் அறிந்த விஷயம் திருமணத்துக்கு பிறகு இவருக்கு குடும்ப வாழ்கையில் ஒரு சில காரணங்களால் சினிமாவில் நடிக்க வந்தார் சென்னை திரைக்கு முழுக்கு போட்டார் ஆனால் இப்போது மீண்டும் சின்ன திரைக்கு வந்துள்ளார்.

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி. அவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிடி, நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை கவர்ந்தது.

திருமணம் செய்தார், திடீரென விவாகரத்து செய்தார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் திடீரென நடிகை ஆனார். சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

வருகிற 21ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பல போட்டிகளில் மோதும் நிகழ்ச்சி இது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.