
அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது விஸ்வாசம் தான் இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முடிந்தது நாம் அறிந்த விஷயம் அடுத்து இந்த குழு மீண்டும் படபிடிப்பு ஆரம்பிக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து தான் இந்த செய்தி
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் நான்காவது படம் விஸ்வாசம். காதல், ஆக்சன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இந்தப்படம் உருவாகி வருகிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதையடுத்து சென்னை திரும்பியுள்ள விஸ்வாசம் படக்குழு அடுத்தபடியாக ஜூன் 22-ந்தேதி முதல் மும்பையில் முகாமிட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
