Tuesday, October 27
Shadow

பிக் பாஸ் 2 வீட்டை விட்டு இன்று வெளியேறபோவது இவர் தான்

பிக் பாஸ் 2 என்றாலே கலவர பூமி போல ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் இதற்க்கு முக்கிய கூட்டணி என்றால் அது யாசிகா ஐஸ்வர்யா மகத் இந்த மூவரும் தான் இவர்களால் தான் இந்த சீசன் ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு சண்டைகள் அதோடு காதுகள் கூசும் அளவுக்கு வார்த்தைகள் இதற்கிடையில் ரசிகர்கள் இவன் எப்படா போவான் என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது கிடுகிடுவென முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக விஜயலக்ஷ்மியும் உள்ளே அனுப்பட்டுள்ளார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மும்தாஜ் , பாலாஜி, மஹத், சென்ட்ராயன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ரசிகர்கள் நெட்டிசன்கள் என பெரும்பாலானோர் மஹத் தான் வெளியேற வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவல் என்றால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மஹத் தான் வெளியேற்றப்படுவார் எனவும் அவர் தான் மிக குறைந்த ஓட்டுகள் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் உறுதியான முடிவிற்கு நாளை வரை காத்திருப்போம்.

அதுமட்டுமில்லாமல் மும்தாஜ் தான் அதிகமான ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் அதன் பிறகு சென்றாயன் அதிக ஓட்டுகள் பெற்றிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.