
பெங்களூரில் 1980ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்த ரிச்சா பலோட், லம்கே (Lamhe) என்ற ஹிந்தி படத்தின் மூலம் 1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1997ம் ஆண்டு வெளிவந்த பர்தேஸ் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தன்னுடைய 16வது வயதில் மாடலிங் வாழ்க்கையை தொடங்கினார். கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்குப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமான பலோட் ஷாஜாகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.
விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தில் ‘அச்சச்சோ புன்னகை’ பாடல் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் ரிச்சா பலோட். தற்போது ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார்.
‘ஷாஜகான்’ முடிந்தவுடன் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு இவருக்கு வந்ததது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
ஷாஜகான், அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், சம்திங் சந்திங் உனக்கும் எனக்கும், நல்வரவு
