Tuesday, April 21
Shadow

நடிகை புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் பிறந்த தினம் இன்று

கேரளாவை சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்தான் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம். ஒமர் லூலு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

யு டியூப் தளத்தில் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை சுமார் ஐந்து லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர். பாடல் நடுவே அவர் புருவத்தால் செய்யும் மாயாஜால ரொமான்ஸால் பாட்டிற்கு எக்கச்செக்க லைக்ஸ் குவிந்தது.