Wednesday, October 28
Shadow

இயக்குனர் மகேஷ் பட் பிறந்த தினம் இன்று

இவர் தேசிய திரைப்பட விருது, ‘சிறப்பு நடுவர் குழு’ விருது (Special jury), நர்கிசு தத் விருது (Nargis Dutt Award), மற்றும் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மகேசு பட், அமெரிக்காவின் ‘டீச் எய்ட்ஸ்’ (TeachAIDS) என்ற தன்னார்வ அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்

1948, செப்டம்பர் 20இல் மும்பையில் பிறந்த மகேஷ், சிறுவயதிலேயே அவரது பெற்றோர்கள் பிரிந்ததின் காரணமாக தனது அம்மாவான ‘ஷிரின் முகமது அலி’ (Shirin Mohammad Ali) அரவணைப்பில் வளர்க்கப் பட்டார் (அவரது தந்தை ‘நானாபாய் பட்’ ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்). மகேஷ் பட்டின் தந்தை ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த குசராத்தி பிராமணராகவும், மற்றும் அவரது தாயார் ‘தாவூதி போரா’ பின்னணியில் உருவான குசராத்தி இசுலாமிய சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பட் அவரது குடும்ப நண்பர் ஒருவரின் உதவி யால் ராஜ் கோஸ்லா (Raj Khosla) என்பவரிடம் துணை இயக்குநராக சேர்ந்தவர், தனது 21ஆவது வயதிலேயே இயக்குநராக அறிமுகமானார். 1984இல் இவர் தயாரித்த ‘ஸாரான்ஷ்’ திரைப்படம் 14ஆவது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், 1986இல் வெளிவந்த ‘நாம்’ திரைப்படம் இவரது முதல் வர்த்தகத் திரைப்படமாக கருதப்பட்டது.