Saturday, April 18
Shadow

மாரி 2 சோகம் தீர வந்தது புது செய்தி?

ஆரம்ப நாட்களில்  தனுஷ்  சண்டை காட்சிகள் வந்தாலே திரையரங்கில் நக்கல் சிரிப்பு சத்தம் பலமாகத்தான் இருந்து வந்தது அதற்கு பெரும் எடுத்துக்காட்டு புதுப்பேட்டை படத்தின் பெரும் “பிளாப்”

இருப்பினும் அவர் திறமையாலும் நடிப்பிலும் வளர்ந்து இன்று பெரும் உச்சத்தில் உள்ளார்

பொல்லாதவன் வடசென்னை படிக்காதவன் போன்ற சில படங்களில் தனுஸின் சண்டைக்காட்சிகள் வெகுசஞன மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டாலும் பெரும்பாலோர் தனுஷின் ஜனரஞ்சகமான நடிப்பை தான் விரும்புகின்றனர்

அதை புரிந்து கொள்ளாமல் மாரி என்ற படத்தை எடுத்தார் கலவையான விமர்சனங்களே வந்தது இருப்பினும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருந்ததால் படம் தப்பித்தது

இந்த லட்சணத்தில மாரி 2 வேறு எடுத்து அதுவும் திரையில் ஒடிக்கொண்டு இருக்கிறது. என்னே ஒன்று மாரி 2 பார்த்தவர்கள் தான் திரையரங்கில் இருந்து விட்டால் போதுமென தலைதெரிக்கின்றனர்..!

இப்படி இருக்கையில் தனுஷ் ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு இனிப்பு செய்தி ஆம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ஒன்றுசேருகின்றது அசுரன் என்ற படத்திற்கு….!

பார்ப்போம் இனி தனுஷ் என்ன செய்ய போகிறார் என்று???