
சைந்தவி ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார். இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் திருமணம் நடந்தது.
வெயில்,கிரீடம் தாண்டவம் என 25 படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமாராய் இவர் பத்தாண்டுகளாக காதலித்த வந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அவரது காதல் மனைவியும், பாடகியுமான சைந்தவியும் இணைந்து பின்னணிப் பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்
பட்டியல் அந்நியன், தொட்டி ஜெயா, பரமசிவன், வெடி, வேட்டை, சகுனி, சுந்தரபாண்டியன், துங்காவனம், தலைவா, ராஜாராணி, தேக்கடி, கப்பல், திரிசா இல்லேனா நயன்தாரா, சேதுபதி, தெறி
