Tuesday, April 21
Shadow

மூன்றாம் நாளில் விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன், 100 கோடியை எட்டியது.

அஜீத்தின் விஸ்வாசம், கடந்த 10ம் டேஹ்டி வெளியானது. இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் தல, நயன்தாரா, பேபி அணிகா மற்றும் ஜெகதிபாபு முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜீத் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இருவரும் இணைந்து கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். விவேகம் படத்திற்கு பின்னர், இருவரும் விஸ்வாசம் இணைத்து பணியாற்றிய விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் இணைந்தே வெளியாது.

இதுவரை இந்த படம் வெற்றிகாரமாக பாக்ஸ் ஆபீசில் ஓடி கொண்டிருக்கிறது. இதற்கு பொங்கல் விடுமுறையும் ஒரு காரணமாகும். கூடுதலாக தமிழ்நாடு அரசு வழங்கிய 10 நாட்கள் சிறப்பு காட்சிக்களுகான அனுமதியால் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது.

விஸ்வாசம் படம் வெளியான மூன்றாவது நாளில், இந்த படத்தின் உலகளாவிய கலெக்சன், 100 கோடி வசூல் இலக்கை எட்டியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வெவேறு விதமான விமர்சனங்களை சந்தித்த இந்த படம், சிறந்த படம் என்று கலெக்சனில் நிரூபித்துள்ளது.

கிராமம் சார்ந்த கதையுடன் பொழுதுபோக்கு படமாக வெளியான இந்த படம் முதல் மற்றும் இரண்டாவது நாளில் முறையே 19.45 கோடி மற்றும் 18.07 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த இந்த படத்தின் வசூல் 35.52 கோடியாகும்.

மூன்றாம் நாளான நேற்று விஸ்வாசம் சென்னையில் மட்டும் ஒரு கோடி ரூபாய் கலெக்ட் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பிடித்தது. வர்த்தகக ஆய்வாளர் ரமேஷ் பாலா வின் கருத்து படி, கடந்த மூன்று நாட்களில் இந்த படம் 2.78 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் கதை, நல்ல முறையில் குழந்தை வளர்ப்பது குறித்த படமாகும். இந்த படம் தென்னிந்தியாவில் அதிக மக்களை கவர்ந்துள்ளது. இதனாலேயே இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆதாரம் ஆங்கில பத்திரிக்கை இந்தியா டுடே ஸ்க்ரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளது #viswasam #ajith #siva #sathyajothi #indiatoday #boxoffice