Saturday, June 27
Shadow

கனா படத்தின் நாயகன் தர்ஷன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

‘கனா’ படத்தின் வெற்றிக்கு பிறகு தர்ஷன் நடிக்கும் படம் ‘தும்பா’. பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்குகிறார் இந்த படத்துக்கு அனிருத்,  இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது.
அனிருத்திடம் இன்னும் பாடல் தரவில்லை என்று சொல்ல, அதற்கு பாடலுக்கான சூழல் என்ன என்று அனிருத் கேட்கிறார்.
புலி வருவது போன்ற காட்சி என்று இயக்குநர் சொல்ல, நீங்கள் முதலில் அந்த காட்சியை படமாக்குங்கள் புலியை பார்த்தால் தான் இசையமைக்க முடியும் என்கிறார் அனிருத். அதற்கு உடனே இயக்குநர், அனிருத் இருக்கும் இடத்திற்கு புலியை அனுப்புகிறார். புலியை பார்த்து பயந்து அனிருத் இசையமைப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது